எகிப்து கால்பந்து நட்சத்திரம் சலாஹ்வுக்கு மற்றுமொரு விருது

259

லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் எகிப்தின் மொஹமட் சலாஹ், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆபிரிக்க கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதை வென்றுள்ளார்.   

ஆண்டுதோரும் ஆபிரிக்காவின் சிறந்த கால்பந்து வீர, வீராங்கனையை தெரிவுசெய்யும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. கானாவில் கடந்த 04ஆம் திகதி நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் 2017இல் ஆபிரிக்க கண்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் அணிகளுக்கு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

எகிப்தின் சலாஹ்வுக்கு அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருது

2017ஆம் ஆண்டுக்கான அரேபியாவின்…

இதில் எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற 25 வயதான மொஹமட் சலாஹ் (625 புள்ளிகள்), வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.  

சலாஹ்வுடன் குறித்த விருதுக்காக போட்டியிட்ட செனகல் அணியின் நட்சத்திர வீரரும், லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகின்றவருமான சாடியோ மானே (507 புள்ளிகள்) 2ஆவது இடத்தையும், ஆபிரிக்கா நாடான காபோன் அணிக்காக விளையாடிவருகின்ற பிர்ரே இமெரிக் (311 புள்ளிகள்) 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  

இவ்விருதை எகிப்து சார்பாக சுமார் 34 வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட முதலாவது வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார். முன்னதாக 1983ஆம் ஆண்டு எகிப்தைச் சேர்ந்த மெஹ்மூத் அல் காதிப் இந்த விருதைப் பெற்றிருந்தார். அதன்பின் தற்போது மொஹமட் சாலஹ் பெற்றுள்ளார்.

அண்மைக்காலமாக சர்வதேச கால்பந்து அரங்கில் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற இவரின் துடிப்பான ஆட்டத்தால் எகிப்து அணி இவ்வருடம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு தகுதிபெற்றது.

DCL சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டித் தினத்தில் மாற்றம்

அத்துடன், இந்தப் பருவகாலத்தில்தான . எஸ் ரோமா கழகத்திலிருந்து லிவர்பூல் கழகத்துக்கு சலாஹ் மாறினார். ஆபிரிக்க நாடுகளில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்த வீரராக லிவர்பூல் அணிக்கு மாறியதும் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற சலாஹ், பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை நடைபெற்ற 21 லீக் போட்டிகளில் 17 கோல்களை அடித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 29 போட்டிகளில் 23 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். அதேநேரம் கடந்த வருடத்தில் மாத்திரம் 59 கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு 38 கோல்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, 2017ஆம் ஆண்டுக்கான அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும், பி.பி.சியின் ஆபிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் மொஹமட் சலாஹ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விருதை பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த சலாஹ் இந்த விருதை வெல்வது ஒரு கனவு தான். 2017 எனக்கு நம்பமுடியாத ஆண்டாகும், இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு தகுதிபெற்றமை மற்றும் லிவர்பூல் கழகத்துக்காக சிறப்பாக விளையாடியதையும் எனது வாழ்க்கையின் முக்கிய தருணமாக கருதுகிறேன். எனவே, நான் ஆபிரிக்காவிலும் எகிப்திலும் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்என்றார்.

முதல்முறை இலங்கை வரவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

PHOTO COURTESY – ameyawdebrah.com

மொஹமட் சலாஹ்வின் தனித்துவமான ஆட்டத்தினால், அவர் இன்று உலகம் பூராகவும் பேசப்பட்டு வருகின்ற வீரராக மாறியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் பருவகாலத்திற்காக ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகம், மொஹமட் சலாஹ்வை 100 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கால்பந்து வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வருடத்தின் சிறந்த கால்பந்து அணியாக எகிப்து தெரிவாகியதுடன், வருடத்தின் சிறந்த கால்பந்து பயிற்றுவிப்பாளராக எகிப்து அணியின் பயிற்றுனர் ஹெக்டர் கூபர் தெரிவானார். அத்துடன், ஆபிரிக்க கால்பந்து வீராங்கனையாக நைஜீரியாவின் எசிசாட் ஒஷோலா தெரிவுசெய்யப்பட்டார்.