எகிப்தின் சலாஹ்வுக்கு அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருது

248
Mohamed Salah

2017ஆம் ஆண்டுக்கான அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை எகிப்து நாட்டின் பிரபல கால்பந்து வீரரும், லிவர்பூல் கழகத்தின் நட்சத்திர முன்கள வீரருமான மொஹமட் சலாஹ் பெற்றுக்கொண்டார்.

அரேபிய நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் 2017ஆம் ஆண்டில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்ய அரேபிய நாடுகளில் உள்ள 100 விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன்படி, பெரும்பாண்மை வாக்குகளுடன் 582 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மொஹமட் சலாஹ், வருடத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு

கொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணியின்…

இந்நிலையில், கடந்த முதலாம் திகதி டுபாயில் நடைபெற்ற குளோப் கால்பந்து விருது வழங்கும் நிகழ்வின் போது மொஹமட் சலாஹ்வுக்கான குறித்த விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பென்டினோ வழங்கிவைத்தார்.

இதேநேரம், சவூதி அரேபியாவின் அல்ஹிலால் அணிக்காக விளையாடும் சிரிய நாட்டு வீரரான ஒமர் கிரிபின் (198 புள்ளிகள்) 2ஆவது இடத்தையும், சவூதி அரேபியாவின் அல்அஹ்லி அணிக்காக விளையாடி வருகின்ற மற்றொரு சிரிய நாட்டு வீரரான ஒமர் அல்சோமா (144 புள்ளிகள்) 3ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், ஆபிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் மொஹமட் சலாஹ் பெற்றுக்கொள்ளவுள்ளதாக கால்பந்து வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.  

கடந்த டிசம்பர் மாதம் லண்டனில் நடைபெற்ற 2017இன் பி.பிசியின் ஆபிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் மொஹமட் சலாஹ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2016/17 லா லிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து..

25 வயதாகும் சலாஹ், . எஸ் ரோமா கழகத்திலிருந்து லிவர்பூல் கழகத்துக்கு மாறினார். ஆபிரிக்க நாடுகளில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்த வீரராக லிவர்பூல் அணிக்கு மாறியதும் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற சலாஹ், பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை நடைபெற்ற 21 லீக் போட்டிகளில் 17 கோல்களை அடித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 23 கோல்கள் அடித்துள்ளார்.  இதன்படி, பிரீமியர் லீக் தொடரின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதையும் அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் கொங்கோ அணிக்கெதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் ஆபிரிக்க மண்டல இறுதி ஆட்டத்தில் இளம் நட்சத்திர வீரரான மொஹமட் சலாஹ்வின் அபார கோலினால் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு எகிப்து அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுக்கொண்டது.

அதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான கால்பந்து தொடரிலும் எகிப்து அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்ற பெருமையும் சலாஹ்வையே சாரும். எனினும், கெமரூன் அணியுடனான இறுதிப் போட்டியில் எகிப்து அணி தோல்வியைத் தழுவியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

முதல்முறை இலங்கை வரவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்..

இந்நிலையில், எதிர்வரும் பருவகாலத்திற்காக ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகம், மொஹமட் சலாஹ்வை 100 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வருடத்தின் சிறந்த அரேபிய கால்பந்து அணியாக சவூதி அரேபியா தெரிவாகியது. பிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு 5ஆவது தடவையாகவும் தெரிவான சவூதி அரேபியாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை போர்த்துக்கல் அணியின் தலைவரும், ரியல் மெட்ரிட் கழகத்தின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார். மேலும், வருடத்தின் சிறந்த கால்பந்து கழகமாக ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகமும், அக்கழகத்தின் முகாமையாளரான சினேடின் சிடேன் வருடத்தின் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.

Photo Courtesy – Global Soccer Awards 2017 Official Facebook & Getty images