இங்கிலாந்தின் சகலதுறைவீரரான மொயின் அலிக்கு பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் OBE (Officer of the Order of the British Empire) விருதானது வழங்கப்பட்டிருக்கின்றது
கட்டார் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையின் ரிஸ்லான் இக்பால்
தற்போது 34 வயதாகும் மொயின் அலி கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதும் இங்கிலாந்து அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தொடர்ந்தும் ஆடி வருகின்றார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதி தலைவராகவும் செயற்பட்டு வரும் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் 195 விக்கெட்டுக்கள் அடங்கலாக 2914 ஓட்டங்களை (5 சதங்கள் அடங்கலாக) குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2019ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வென்ற இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்காக 200 இற்கு மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் மொயின் அலி, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக வழங்கிய சேவைகளை கௌரவிக்கும் பொருட்டே அவருக்கு OBE விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் அரசின் உயரிய விருது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் மொயின் அலி, தனக்கு இந்த விருது கிடைத்தமை பிரிட்டிஷ்-ஆசிய சமூகங்களுக்கு தான் தேசிய கிரிக்கெட் அணியில் இருந்ததன் மூலம் காட்டியிருந்த முன்னுதாரணம் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
”இது (விருது கிடைத்தமை) வெளிப்படையான ஒரு கௌரவமாகும். நீங்கள் இதனை மேலும் யோசிக்கும் போது, இந்த விருது எந்தளவிற்கு சிறந்தது என்பதனை உணர முடியும்.”
இதேநேரம் இந்த உயரிய விருதினை வென்றமைக்கு, தனது பெற்றோர்கள் முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட மொயின் அலி அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு மோசமான தோல்வி
அதேநேரம் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதும் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில், மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் ஆட விருப்பம் இருப்பதாகவும் மொயின் அலி குறிப்பிட்டிருக்கின்றார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலமின் அழைப்பிற்கு அமையவே, மொயின் அலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<