கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹெட்ரிக் தங்கம் வென்ற மிதுன்ராஜ்

319

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்;ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் நான்காவதும், கடைசியும் நாளான இன்றைய தினம் (10) நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த சசிந்திரகுமார் மிதுன்ராஜ் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 45.30 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

இதன்மூலம் இம்முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்று மிதுன்ராஜ் அரிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.

முன்னதாக கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பங்குகொண்ட சசிந்திரகுமார் மிதுன்ராஜ் 15.13 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

>> கனிஷ்ட மெய்வல்லுனரில் மிதுன், அபினயன், ஜதூஷிகாவுக்கு தங்கம்

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பங்குகொண்ட அவர், 40.45 மீட்டர் தூரம் எறிந்து புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 19 வயதான மிதுன்ராஜ், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சம்மெட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் என நான்கு வகையான மைதான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் மைதான நிகழ்ச்ச்pக்கான பயிற்சியாளரான ஹரிஹரன் பயிற்சி அளித்து வருகின்றார்.

ஹெரினாவுக்கு 2ஆவது பதக்கம்

23 வயதின்கீழ் பெண்களுக்கான உயரம் பாய்தலில் யாழ். மகாஜனா கல்லூரியின் சந்திரகுமார் ஹெரினா வெள்ளிப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 1.58 மீட்டர் உயரம் தாவியிருந்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற 23 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட ஹெரினா, 2.80 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்றமை குறிபபிடத்தக்கது.

எனவே இம்முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பில் 2 பதக்கங்களை வென்ற ஹெரினாhவுக்கு சுபாஷ்கரன் பயிற்சி அளித்துவருகின்றார்.

>> இலங்கை சாதனையை மீண்டும் தவறவிட்ட புவிதரன்

கமல்ராஜுக்கு வெள்ளிப் பதக்கம்

இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 23 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கமல்ராஜ் இரோய் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 7.27 மீட்டர் தூரம் பாய்ந்தார்.

இறுதியாக கடந்த 2019இல் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனரில் 20 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.36 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அத்துடன், குறித்த தொடரில் ஆண்டின் அதிசிறந்த கனிஷ;ட மெய்வல்லுனராக தெரிவாகிய அவர், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும் அதிசிறந்த மெய்வல்லுனருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

கமல்ராஜ் இ;ரோய் வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலைiயின் பழைய மாணவர் ஆவார்.

அஸீமுக்கு மூன்றாமிடம்

இன்று காலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் கண்டி மெய்வல்லுனர் சங்கம் சார்பில் பங்குகொண்ட மொஹமட் அஸீம் வெண்கலப் பதக்கம் சுவீகரித்தார். குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 04.63 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<