நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடதுகை மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்வெப்ஸன் இணைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியானது அடுத்த வருடம் பங்களாதேஷிற்கு டெஸ்ட் தொடர் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்த நிலையில், மிச்சல் ஸ்வெப்ஸனை குறித்த தொடருக்கு தயார்படுத்தும் முகமாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரை களமிறக்க எதிர்பார்த்துள்ளது.
உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் விளையாட்டில் வீரர் ஒருவர்…..
மிச்சல் ஸ்வெப்ஸன் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் (Big bash) லீக்கில் ப்ரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் அவரை பந்துவீச தயார்படுத்துவதற்காக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் முகாமைத்துவம் அவரை உடனடியாக தேசிய அணியுடன் இணைத்துக்கொண்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பொக்சிங் டே (Boxing day) டெஸ்ட் தொடருக்கான குழாத்துடன் இணைந்து அவர் தனது பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்திருந்த பீட்டர் சிட்ல், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிக் பேஷ் லீக் தொடரில் அவர் அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுவதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.
இடதுகை மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான மிச்சல் ஸ்வெப்ஸன், இந்த பருவாகலத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற செப்பீல்ட் ஷீல்ட் போட்டித் தொடரில் 6 போட்டிகளில் 26.58 என்ற சராசரியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மிச்சல் ஸ்வெப்ஸன் அணியில் இணைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் ட்ரெவர் ஹொன்ஸ், சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தை பொருத்தவரை இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய அவசியம் உள்ளதால் ஸ்வெப்ஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பாக். வீரர் மொஹமட் ஹபீஸுக்கு இங்கிலாந்தில் பந்துவீச தடை
விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய புகாரில்…..
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<