நியூசிலாந்து அணியின் முழுநேர தலைவராகும் மிச்சல் சேன்ட்னர்

Sri Lanka Cricket

69
Mitchell Santner

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான முழுநேர தலைவராக சகலதுறை வீரர் மிச்சல் சேன்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மிச்சல் சேன்ட்னர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முழுநேர தலைவராக செயற்பட்டிருந்த போதும், குறித்த தொடருக்கான தலைவராக மாத்திரமே தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். 

>>லங்கா T10 சுப்பர் லீக் பிளே ஒப் சுற்றில் ஆடும் அனைத்து அணிகளும் உறுதி<<

சேன்ட்னர் நியூசிலாந்து அணியை 24 T20I மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். எனினும் கடைசியாக நடைபெற்ற இலங்கை தொடரில் மாத்திரமே முழு தொடருக்கான தலைவராக செயற்பட்டிருந்தார். 

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடருடன் நியூசிலாந்து அணியின் தலைவர் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியிருந்தார். இவ்வாறா நிலையில் வில்லியம்சனின் இடத்துக்காக சேன்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மிச்சல் சேன்ட்னரின் தலைமைத்துவத்தில் முதல் ஐசிசி தொடராக நியூசிலாந்து அணி சம்பியன்ஷ் கிண்ணத்தில் விளையாடவுள்ளதுடன், அதனை தொடர்ந்து 2026ம் T20 உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<