தென்னாபிரிக்காவிற்கு எதிராக நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மற்றும் அதன் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடர் என்பவற்றில் இருந்து நியூசிலாந்தின் முன்னணி துடுப்பாட்டவீரரான டேரைல் மிச்சல் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஆப்கான் ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
கால் உபாதை ஒன்றினைச் சந்தித்திருக்கும் டேரைல் மிச்சல் குறித்த உபாதையில் இருந்து தேறி வருவதனை அடுத்தே அவர் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆடும் வாய்ப்பினை இழப்பதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடயங்கள் இவ்வாறிருக்க டேரைல் மிச்சல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் உடல் நலம் தேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டேரைல் மிச்சல் இல்லாத நிலையில் ஒரு பிரதியீட்டு வீரரை நியூசிலாந்து அணி அறிவிக்காத போதிலும் அவரின் இடத்தினை நியூசிலாந்து குழாத்தில் ஏற்கனவே காணப்படும் வில் யங் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>இலகு வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி
இதேவேளை நியூசிலாந்து – தென்னாபிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<