ஐ.பி.எல் தொடரிலிருந்து மார்ஷ் வெளியேற்றம்

1418
Mitchell Marsh

9வது ஐ.பி.எல் தொடர் பாதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இவ்வருட  ஐ.பி.எல் தொடரில் இணைக்கப்பட்ட இரு அணிகளில் ஒன்றான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சகலதுறை வீரரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிச்சல் மார்ஷ் உபாதை காரணமாக நாடு திரும்ப உள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள மேற்கிந்திய முத்தரப்பு தொடருக்கு முன் அவர் குணமடையும் வகையில், அவர் விரைவில் தாயகம் திரும்பவுள்ளார்.

றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள மார்ஷ் 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். மிச்சல் மார்ஷிற்கு முன்னதாக ஏற்கனவே பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களான பெப் டுப்லசிஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் உபாதைக்குள்ளாகி ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்