டெஸ்ட் தண்டாயுதத்தை பெற்றது பாகிஸ்தான்

2725
ICC Mace presentation to Misbah

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என அவுஸ்திரேலியாவை வயிட் வாஷ் செய்தது. இதனால் அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது.

பாகிஸ்தான்இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கான விளம்பில் நின்று கொண்டிருந்தது.

அவுஸ்திரேலியா பிடித்த முதல் இடத்தை இந்தியா கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி பிடித்தது. இந்தியாமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றாவிடில் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

பின்  இந்தியாமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி  சமநிலையில் முடிந்தமையால் பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது.

இந்த முதல் இடத்தை பெற்றமைக்கான உத்தியோகபூர்வே டெஸ்ட் தண்டாயுதத்தை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை லாஹூர் கடாபி விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஐசிசி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக்கிற்கு டெஸ்ட் தண்டாயுதத்தை வழங்கு வைத்ததோடு டெஸ்ட் தரவரிசை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தான் உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிகழ்வின் பின் கருத்து  தெரிவித்த மிஸ்பாஹ் உல் ஹக்மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று இருப்பதை விட வேறொன்றும் சிறந்த விடயம் இல்லை, இன்றைய நாள் எனது வாழ்நாளில் சிறந்த நாட்களில் ஒரு நாளாகும், அத்தோடு எனது கிரிக்கட் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் இதுவாகும்.   தமது சொந்த மண்ணில் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் இந்த நிலையை அடிந்தமை  சிறப்பான அம்சமாகும். எமது வீரர்களின் குடும்பங்களுக்கு எனது நன்றிகள், எமது வீரர்கள் சுமார்  6 – 7 மாதங்கள்  குடும்பத்தை பிரிந்து அணியின் வெற்றிக்காக  தியாகம் செய்துள்ளார்கள், இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொரு வீரரையும் பாராட்டுகிறேன், அத்தோடு எமது ரசிகர்களுக்கும் நன்றிகள்என்று கூறி உள்ளார்.

பாகிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலாம் இடத்தில் இருப்பது என்பது ஒரு சவாலான விடயமாகும்.  தற்போது டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள இந்தியா நாளை நியூசிலாந்து அணியுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரை வெல்லுமாயின் பாகிஸ்தான் தமது 1ஆவது இடத்தை இழக்க நேரிடும். பாகிஸ்தானின் அடுத்த டெஸ்ட் தொடர் மேற்கிந்திய தீவுகள் அணியோடு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி டெஸ்ட் தரவரிசையில் 1ஆம் இடத்தில் இருக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கட் சபை 1 மில்லியன் ரூபாவை வழங்க உள்ளது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ஷிகார் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார். மேலும் ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமதுஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். அதனால் இந்தியா துடுப்பாட்டம் மற்றும்  பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

அத்தோடு சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சமீபத்தில் இந்திய அணி  மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. மறுபுறத்தில் நியூசிலாந்து அணி தென் அபிரிக்காவோடு டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதோடு பாகிஸ்தான் அணி முதல் இடத்தில் தொடர்ந்து இருப்பது என்பது மிகவும் சவாலான விடயமாக உள்ளது.