மைலோ கிண்ண இறுதியில் புதிய அணிகளாக மோதும் ஜெகா மீட்பர் -யூனியன்

423

ஐந்தாவது முறையாகவும் இடம்பெறும் மைலோ கிண்ண கால்பந்து தொடரின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அணிகளினை உள்ளடக்கிய அணிகளுக்கு இடையிலான சுற்றுத் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு ஆனைக்கோட்டை யூனியன் மற்றும் வலைப்பாடு ஜெகா மீட்பர் அகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

குறித்த போட்டிகளில் கடந்த ஒரு மாத காலமாக பிரதான சுற்றுக்கான தெரிவுப் போட்டிகள் பல்வேறு மைதானங்களில் இடம்பெற்று, பிரதான சுற்றிற்கு வடமராட்சி, பருத்தித்துறை, வலிகாமம், யாழ்ப்பாணம், தீவகம், மருதங்கேணி ஆகிய பிராந்தியங்களிலிருந்து தலா இரு அணிகள் வீதமும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து எட்டு அணிகளும் தெரிவு செய்யப்பட்டு போட்டியிட்டன.

கடந்த வருடம் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த அணிகளுள் நாவாந்துறை சென். மேரிஸ் அணி தவிர ஏனைய மூன்று அணிகளான கம்பர்மலை யங்கம்பன்ஸ், பாசையூர் சென். அன்ரனிஸ் மற்றும் குருநகர் பாடும்மீன் அணிகளுடன் இணைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

Embed –

மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள்

தற்பொழுது நடைபெற்று வரும் 5 ஆவது மைலோ கிண்ண கால்பந்து போட்டிகளின் ஓர் அங்கமாக 14 மற்றும் 16  …

அதிகளவு எண்ணிக்கையிலான அணிகளினை உள்ளடக்கி, மிகவும் பிரம்மாண்டமாக இடம்பெறுகின்ற இந்த போட்டித் தொடர் வடக்கு வீரர்களுக்கு மிகச்சிறந்த அனுபவக்களமாக அமைகின்றது. குறிப்பாக மழை காலங்களில் மிகவும் அரிதாக போட்டிகளில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு, உதைப்பந்தாட்டத்திற்கு  மழை ஒரு தடையாக அமையாது என்பதனால் இந்த தொடரானது அவர்களினை மழையின் போதும் சிறப்பாக விளையாடுவதற்கேற்ற அனுபவத்தினை வழங்குகின்றது.

நொக் அவுட் சுற்றாக இடம்பெற்ற இத்தொடரின் முன்னைய சுற்றுக்களில் பெற்ற வெற்றிகளின் மூலம், வேலணை ஐயனார், வலைப்பாடு ஜெகா மீட்பர், பாசையூர் சென். அன்ரனிஸ் மற்றும் ஆனைக்கோட்டை யூனியன் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகியிருந்தன.

மைலோ கிண்ணம் 2017 – அரையிறுதி வரை அணிகள்

வேலணை ஐயனார்

சுற்று 1 – சென். ஜேம்ஸ், நாச்சிக்குடா 00 – 03 சென். மேரிஸ், கட்டைக்காடு

சுற்று 2 – வேலணை ஐயனார் 03 – 01 சென். மேரிஸ், கட்டைக்காடு

சுற்று 1 – சென். மேரிஸ், நாச்சிக்குடா 00 – 01 சென். நீக்கிலஸ் நாவாந்துறை

சுற்று 2 – வதிரி டைமன்ட்ஸ் எதிர் சென். நீக்கிலஸ், நாவாந்துறை வெற்றி

காலிறுதிப் போட்டி – வேலணை ஐயனார் 01 – 00 சென்.நீக்கிலஸ், நாவாந்துறை

வலைப்பாடு ஜெகா மீட்பர்

சுற்று 1 – குப்பிளான் குறிஞ்சிக்குமரன் 01 – 02 வலைப்பாடு ஜெகா மீட்பர்

சுற்று 2 –  திக்கம் இளைஞர் 01 – 02 வலைப்பாடு ஜெகா மீட்பர்

சுற்று 1 – வட்டக்கச்சி இளந்தளிர் 02 – 00 உடுத்துறை பாரதி

சுற்று 2 – குருநகர் பாடும்மீன் 01 – 00 வட்டக்கச்சி இளந்தளிர்

காலிறுதிப் போட்டி – வலைப்பாடு ஜெகா மீட்பர் 02 – 02 குருநகர் பாடும்மீன் (பெனால்டி முறையில் 03-02 என வலைப்பாடு ஜெகா மீட்பர் வெற்றி)

பாசையூர் சென். அன்ரனிஸ்

சுற்று 1 – மெலிஞ்சிமுனை இருதஜராசா 03 – 01 வதிரி பொம்மேர்ஸ்

சுற்று 2 – இளவாலை யங் ஹென்றிஸ் 05 – 00 மெலிஞ்சி முனை இருதஜராசா

சுற்று 2 – உருத்திரபுரம் 00 – 04 பாசையூர் சென். அன்ரனிஸ்

காலிறுதிப் போட்டி – பாசையூர் சென். அன்ரனிஸ் 01 – 01 இளவாலை யங் ஹென்றிஸ் (பெனால்டி முறையில் 04-03 என பாசையூர் சென். அன்ரனிஸ் வெற்றி)

ஆனைக்கோட்டை யூனியன்

சுற்று 1 – பலாலி விண்மீன் 01 – 00 நாச்சிக்குடா சென். ஆன்ஸ்

சுற்று 2 – திருநகர் 00 – 04 பலாலி விண்மீன்

சுற்று 1 – ஆனைக்கோட்டை யூனியன் 04 – 02 கிளிநொச்சி லக்கி ஸ்ரார்

சுற்று 2 – ஆனைக்கோட்டை யூனியன் 03 – 00 கம்பர்மலை யங்கம்பன்ஸ்

காலிறுதிப் போட்டி – பலாலி விண்மீன் 00 – 03 ஆனைக்கோட்டை யூனியன்

முதலாவது அரையிறுதிப் போட்டி 

வேலணை ஐயனார் எதிர் வலைப்பாடு ஜெகா மீட்பர்

 போட்டியின் முதல் நிமிடத்திலேயே கோலினைப் போட்டு ஐயனாரினை முன்னிலைப்படுத்தினார் சுபராஜ். அடுத்த நிமிடத்திலேயே ஐயனாரிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை கோல் கம்பத்திற்கு மேலால் உதைந்தார் அகீபன்.

தொடர்ந்து கோகுல்தாஸ் வலது பக்கத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினையும் கோலாக்காது கோட்டை விட்டனர் ஐயனார் வீரர்கள். பதிலுக்கு ஜெகா மீட்பரின் ஸ்ரீபன்ராஜ்ஜினது முயற்சி பின்களத்தில் தடுக்கப்பட்டது. மீண்டும் கிறிஸ்துராஜ் பந்தினைக் கோலினை நோக்கி உதைய, அதனை ஐயனாரின் கோல் காப்பாளர் தடுத்தார்.

Embed –

இலங்கைக்கு எதிராக கோல் மழை பொழிந்த உஸ்பகிஸ்தான்

தஜிகிஸ்தானில் இடம்பெறும் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான …

14ஆவது நிமிடத்தில் கோகுலதாஸ் உள்ளனுப்பிய பந்தினை ஜெகா மீட்பரின் கோல் காப்பாளர் சேகரித்தார். அடுத்த நிமிடத்திலேயே ஜெகா மீட்பரின்  சுமன் கோலினைப் பெற்றுக்கொடுத்து ஐயனாரின் முன்னிலையை தகர்த்தார்.

18ஆவது நிமிடத்தில் சுமன் வழங்கிய பந்தினை ஜெயராஜ் கோலுக்குள் உதைய அதனை லாவகமாகத் தடுத்தார் ஐயனாரின் கோல் காப்பாளர்.

முதற் பாதியின் இறுதி நிமிடங்களில் வலது மூலையிலிருந்து அகீபன் உதைந்த பந்தினை கோல் காப்பாளர் சேகரித்தார்.  அடுத்து சுபராஜ்ஜிற்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை கோலிற்கு மேலால் உதைந்து வீணடித்தார்.

முதல் பாதி: ஜெகா மீட்பர் 1 – 1 ஐயனார்

முதற்பாதி நிறைவடைந்த அதே விறுவிறுப்புடன் ஆரம்பமானது இரண்டாவது பாதி. 34ஆவது நிமிடத்தில் வலது பக்கத்திலிருந்து கிடைத்த பந்தினை கோலாக மாற்றினார் கனிசியஸ். அடுத்து கிடைத்த வாய்ப்பினை வெளியே உதைந்து ஏமாற்றினார் சுமன்.

ஐயனாரின் கோகுலதாஸ் அடுத்தடுத்து உள்ளனுப்பிய இரண்டு பந்துகளும்  எதிரணியினால் தடுக்கப்பட்டன. 45ஆவது நிமிடத்தில் ஜனோஜ் வழங்கிய பந்தினை கோலாக்காது தவறவிட்டார் அகீபன்.

பின்னர் 49ஆவது நிமிடத்தில் கோலினைப் போட்டு மீண்டும் கோல் கணக்கினை சமப்படுத்தினார் கோகுலதாஸ். 54ஆவது நிமிடத்தில் மத்திய கோட்டிலிருந்து அகீபன் உதைந்த பந்தினை சக வீரர் ஹெடர் மூலம் கோலாக்க முயற்சித்த வேளை பந்து கோலிற்கு மேலால் வெளியேறியது.

இறுதி நிமிடத்தில் ஜெகா மீட்பரின் முன்கள விரர் உள்ளனுப்பிய பந்து மயிரிழையில் வெளியேற போட்டி 02-02 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.

முழு நேரம்: ஜெகா மீட்பர் 2 – 2 ஐயனார்

கோல் பெற்றவர்கள்

ஜெகா மீட்பர்S. சுமன் 15’, P கனிசியஸ் 34’

ஐயனார்சுபராஜ் 6’, கோகுலன் 49’

பின்னர் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையினை  05-04 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தொடரில் முதன் முறையாக பங்கெடுத்த வலைப்பாடு ஜெகா மீட்பர் இறுதிப் போட்டிக்குள் நுழைய மீண்டுமொரு அரையிறுதியுடன் வெளியேறியது ஐயனார் அணி.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டி

பாசையூர் சென். அன்ரனிஸ் எதிர் ஆனைக்கோட்டை யூனியன்

கடந்த வருட இறுதிப் போட்டியில் பாடுமீனிடம் தவறவிட்ட கிண்ணத்தினை இம்முறை கைப்பற்றும் நோக்குடன் களம்புகுந்தது சென் அன்ரனிஸ் அணி. முதல் ஐந்து நிமிங்களிற்குள்ளேயே இரண்டு வாய்ப்புக்களைத் தவறவிட்டார் அன்ரனிஸின் அஜித். யூனியனின் தில்லை காந்தனின் முயற்சியினை சுதர்சன் தடுத்தார்.

Embed – https://goo.gl/U8g2d9

11ஆவது நிமிடத்தில் கோல் பெறும் வாய்ப்பினை நழுவ விட்டார் யூனியனின் சுஜந்தன். அன்ரனிஸின் கலிஸ்ரர் உதைந்த பந்து கோல் காப்பாளரின் கைகளை சென்றடைந்தது. யூனியனின் தர்சிகன் உதைந்த பந்து கோல் காப்பாளரால் சேகரிக்கப்பட, பதிலுக்கு கிரோசாந்த் உதைந்த பந்து கோல் காப்பாளரால் இறுதி நொடியில் தடுக்கப்பட்டது.

யூனியனின் சுஜந்தன், தர்சிகன் ஆகியோரிற்குக் கிடைத்த இலகு வாய்ப்பினை அவர்கள் கோட்டை விட்டனர்.

கலிஸ்ரர் கோலினை நோக்கி உதைந்த பந்து கோல்காப்பாளரின் கைகளில் பட்டு நழுவ அதனை மீண்டும் ஜூட் வனிஸ்ரன் கோலிற்குள் உதைய கோல் காப்பாளர் பந்தைத் தடுத்தார்.

26ஆவது நிமிடத்தில் இலகு வாய்ப்பினை யூனியனின் மதிராஜ் நழுவவிட்டார்.

இரு அணிகளும்  வாய்ப்புக்களை நழுவ விட கோல் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது முதற் பாதி.

முதல் பாதி: சென். அன்ரனிஸ் 0 – 0 யூனியன்

விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாது ஆரம்பமான இரண்டாவது பாதியிலும் வாய்ப்புக்களினை தொடர்ச்சியாக இரு அணி வீரர்களும் கோட்டை விட்டனர்.

30ஆவது நிமிடத்தில் அன்ரனிஸின் அஜித்குமார் கோல் பெற்றபோதும் நடுவர் ஓஃவ் சைற்றாக அறிவிக்க சமநிலை தொடர்ந்தது. யூனியனின் சுஜந்தன் உதைந்த பந்து சிறிய இடைவெளியில் கோலை விட்டு வெளியேறியது.

அஜித்குமார் மீண்டுமொரு முறை ஹெடர் மூலம் கோலிற்கு அனுப்பிய பந்து மயிரிழையில் வெளியேறியது.

இறுதி நேரத்தில் யூனியன் வீரர்கள் அடுத்தடுத்து கோல் முயற்சியை மேற்கொண்ட போதும் நிறோசன் அவற்றைத் தடுத்தார்.

போராடிக்கொண்டிருந்த யூனியன் அணியின் முன்கள வீரரினை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக அன்ரனிஸ் வீரர் நிறோசன் நடுவரால் மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கப்பட்டார்.  அச்சந்தர்ப்பத்தில் கிடைத்த ப்ரீ கிக்கினை தில்லைகாந்தன் கோலிற்கு உதைய அது தடுக்கப்பட, விரைந்து செயற்பட்ட தனுஜன் மீண்டும் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி கோலாக்கினார்.

இறுதி நேர கோலினால் வெற்றிபெற்று முதன் முறையாக இறுதிப் போட்டியில் தடம்பதித்தது ஆனைக்கோட்டை யூனியன் அணி.

முழு நேரம்: சென். அன்ரனிஸ் 0 – 1 யூனியன்

கோல் பெற்றவர்கள்

யூனியன் விளையாட்டுக் கழகம்தனுஜன் 59’

இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும்.

இதே தினத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான 14 மற்றும் 16 வயதுப் பிரிவுகளின் கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டிகளுமு் இடம்பெறும்