5 வருடங்களுக்கு பின் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இலங்கையில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடர் ஆரம்பமாக முன் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை சபை பதினொரு பேர் அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை சபை பதினொரு பேர் அணியின் தலைவராக சகலதுறை வீரர் மிலிந்த சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
30 வயதான மிலிந்த சிறிவர்தன கடந்த ஒக்டொபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கட்டில் அறிமுகமானார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மிலிந்த சிறிவர்தன 33.11 என்ற துடுப்பாட்ட சராசரியில் 298 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு 23.36 பந்துவீச்சு சராசரியைக் கொண்டுள்ளார்.
அத்தோடு இலங்கை சபை பதினொரு பேர் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டில்ஹார பெர்னாண்டோ இடம்பிடித்துள்ளதோடு இங்கிலாந்து மண்ணில் பிரகாசித்த தசுன் ஷானகவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை சபை பதினோரு பேர் அணி
மாதவ வர்ணபுர, ஒசத பெர்னாண்டோ, மனோஜ் சர்ச்சந்திர (விக்கெட் காப்பாளர்), அசேல குணரத்ன, செஹான் ஜயசூரிய, மிலிந்த சிறிவர்தன , தசுன் சானக, சதுரங்க டி சில்வா, நிசல தாரக, விமுக்தி பெரேரா, டில்ஹார பெர்னாண்டோ.
மேலதிக வீரர்கள் : லசித் எம்புல்தெனிய, சமிக கருணாரத்ன
அவுஸ்திரேலிய அணி
ஷோன் மார்ஷ், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் , எடம் வோஜஸ், மிட்ச் மார்ஷ், பீட்டர் நெவில் (விக்கெட் காப்பாளர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்டீபன் ஓ’கீஃப், நெதன் லியொன், ஜெக்சன் பேர்ட், நேதன் கோல்ட்டர் நைல்
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்