T20I அணியை பொருத்தவரை, தங்களுடைய அணியின் பலத்தைக் கொண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் வெற்றிகளை பெற முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
மனிதநேயப் பணியில் இணைந்த வனிந்து ஹஸரங்க, அகில தனன்ஞய
கொவிட்-19 என அழைக்கப்படும்…..
அவுஸ்திரேலியாவில் இவ்வருட இறுதியில் ஐசிசி T20I உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இலங்கை T20I அணியின் மீது, அதிகமான பார்வையை இலங்கை கிரிக்கெட் சபை செலுத்தியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இறுதியாக சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணி 3-0 என வைட்வொஷ் முறையில் தோல்வியை சந்தித்தது.
இந்தத் தோல்வியின் பின்னர், இலங்கை அணி கொவிட்-19 தொற்று காரணமாக எந்தவொரு சர்வதேச போட்டித் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடரின் தோல்வி குறித்தும், இலங்கை T20I அணி குறித்தும் மிக்கி ஆர்தர் கருத்து வெளியிட்டார்.
“இலங்கை T20I அணியில் சில விடயங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி T20I போட்டிகளை பொருத்தவரை, மிக பலமான அணி. அந்த அணியை வீழ்த்துவதென்பது இலகுவான விடயமல்ல. நான் இதற்கு முன்னர், பாகிஸ்தான் T20I அணியுடன் இலங்கை வந்திருந்தேன். அதன்போது, இலங்கை அணியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மற்றும் தேவைகளை அறிந்திருந்தேன்.
போட்டிகளை பொருத்தவரை அணியொன்றுக்கு ஏற்ப வெற்றிக்கான ஒரு முறைமையினை கண்டறிவது மிக முக்கியமான விடயமாகும். அதுவும், நம்மிடம் இருக்கும் வசதிகளையும், திறமைகளையும் வைத்தே குறிப்பிட்ட முறைமையினை கண்டறிய முடியும். அதனால், நாம் எமது வீரர்களுக்கு ஏற்ற முறைமையினை கண்டறிந்து அதனை செயற்படுத்த வேண்டும்” என்றார்.
இலங்கை வீரர்களின் உடற்தகுதி பேணப்படுகிறதா?
உலகளாவிய ரீதியில் தீவிரம்…..
இலங்கை அணி T20I தொடரில் தோல்வியைக் கண்டபோதும், அதற்கு முதலில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றிக்கொண்டிருந்தது. இலங்கை ஒருநாள் அணியின் முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட மிக்கி ஆர்தர்,
“மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் தயார்படுத்தல்களுக்கு ஏற்ப, கடினமாக உழைத்த வீரர்களுக்கே இந்த வெற்றி உரித்தாகும். முக்கியமாக நாம் எவ்வாறான கிரிக்கெட் ஒன்றை ஆட வேண்டும் என சிந்தித்திருந்தோமோ அதனை வீரர்கள் நடைமுறைப்படுத்தினர்.
அதுமாத்திரமின்றி, தனிப்பட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட பணியினை செவ்வனே செய்திருந்தனர். இதனை பார்க்கும் போது, அணி வீரர்கள் தங்களை எவ்வாறு வெளிக்காட்டுகின்றனர் என்பதையும், நம்பிக்கையும், தனிப்பிட்ட வீரர்களின் பிரகாசிப்பும் அணியின் திட்டத்தில் எவ்வாறு பங்களிப்பு செய்கின்றது என்பதை அறியமுடிகின்றது” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<