தன் பெற்றோருக்கு நடந்த நிறவெறி அடக்குமுறையை கண்ணீர் மல்க கூறிய மைக்கல் ஹோல்டிங்

226
Michael Holding

ஆரம்ப காலங்களில் தன் பெற்றோர் எதிர்கொண்ட நிறவெறி அடக்குமுறை, வசைகளை நினைத்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற பேட்டியின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கல் ஹோல்டிங் கண்ணீர் விட்டார்.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் (8) ஆரம்பமாகியது.

நீண்ட இடைவேளையின் பின் ஆரம்பமான சர்வதேச கிரிக்கெட்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சர்வதேச

117 நாட்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமாகியது. 

இந்த நிலையில், கடந்த மே மாதம் ஜோர்ஜ் ப்ளொய்ட் என்ற கருப்பினத்தவரை அமெரிக்காவின் மினிசொட்டா (Minnesota) மாகாணத்தின் மினியா பொலிஸ் அதிகாரிகள் இருவரால் கொன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து போராட்டங்கள் நடைபெற்றது.

இதனிடையே, இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது கருப்பினத்தவர்களுக்கான அடக்குமுறைக்கு எதிராக ஆதரவு தெரிவிக்கும் வகையில் ப்ளெக் லைவ்ஸ் மேட்டர் (BlackLivesMatter) என்ற வாசகம் எழுதிய ஜேர்சியினை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அணிந்திருந்தனர்.

அத்துடன், போட்டி ஆரம்பமாகியதும் இரண்டு நாட்டு அணியினரும், நடுவர்களும் ப்ளெக் லைவ்ஸ் மேட்டர் என்ற இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மண்டியிட்டு ஒரு நிமிடம் நின்றனர்.

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்து ஊடகமான ஸ்கை நியூஸின் மார்க் ஆஸ்டினிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மைக்கல் ஹோல்டிங், நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன், தொலைக்காட்சி நேரலையிலேயே உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், 

”அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவரை வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மிரட்டிய சம்பவத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பூங்காவில் நாயை வைத்திருந்த பெண்ணிடம், அதை சங்கிலியால் கட்டும்படி கருப்பினத்தவர் கூறியுள்ளார். சட்டப்படி அப்படித்தான் செய்ய வேண்டும் என்றார். 

ஆனால், அந்தப் பெண் கருப்பரை மிரட்டியுள்ளார். பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி கருப்பினத்தவர் ஒருவர் என்னை மிரிட்டுகிறார் எனச் சொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் வாழும் சமூகம் வெள்ளை இன மக்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தை வழங்காமல் அவர் எப்படி இவ்வளவு தைரியமாக கருப்பரினத்தவரை மிரட்ட முடியும்? அவர் வாழும் சமூகத்தின் தன்னிச்சையான எதிர்வினை அது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் மாற்றம் எங்கிருந்து வரும்? நிறவெறி பிறப்பிலேயே இருப்பதல்ல, சூழ்நிலை ஒருவரை நிறவெறியாளராக மாற்றுகிறது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122

ஆட்டநிர்ணய விசாரணைப் பிரிவை திக்குமுக்காட வைத்த சங்கக்கார

ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் மரணத்தில் பொலிஸாரின் முகத்தைப் பாருங்கள். அவர்களுக்கு அதில் அக்கறையில்லை என்பது போல நடந்து கொண்டார்கள். இன்னொரு கருப்பினத்தவரை கொன்று விட்டோம் என்று எண்ணுவது போல இருந்தது. 

கருப்பினத்தவர்களின் வாழ்க்கை முக்கியம் போராட்டத்தில் பல வெள்ளை இனத்தவர்களும் கலந்துகொண்டனர். இது மாற்றத்தைக் கொண்டு வரும். இந்த இயக்கம் எதற்காகப் போராடுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

அதேநேரம், என்னுடைய வாழ்க்கையில் இது குறித்து உணர்ச்சிவசப்படும் தருணம் என் பெற்றோரை நினைக்கும் போது எனக்கு ஏற்படும். இப்போது அந்த நினைப்பு எனக்கு வருகிறது. என் பெற்றோருக்கு என்ன நடந்தது என்பதை நான் அறிவேன்.

என் அம்மாவின் குடும்பத்தினர் என் அம்மாவுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள், காரணம் என்ன தெரியுமா? என் அப்பா மிகவும் கருப்பாக இருந்தார்.

இனவெறிக்குள்ளாகிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய காலப்பகுதியில்

அவர்கள் எதையெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். அது எனக்கும் உடனடியாக நடந்தது என மைக்கல் ஹோல்டிங் கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடியே சென்னார். 

அவர் மேலும் கூறும்போது, மாற்றம் வர வேண்டும்… சமூகம் மாற வேண்டும்’ என தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க