அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க், அவுஸ்திரேலிய அரசின் உயரிய விருதான ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா (Order Of Australia) என்ற கௌரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
T20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ்
அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் 2015ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா‘ என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருது குறித்து மைக்கல் கிளார்க் கருத்து தெரிவிக்கையில், “உண்மையை சொல்லப்போனால் விருது அறிவிப்பை முதலில் நான் நம்பவில்லை. இந்த தேர்வு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், கௌரவத்தையும் அளிக்கிறது.
அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற அனைத்து விளையாட்டுக்களை விடவும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும். இது நமது இரத்தத்தில் கலந்துள்ளது. மைதானத்தில் இருந்து போட்டியைப் பார்க்காவிட்டாலும், கிரிக்கெட் விளையாடுகின்ற சத்தத்தைக் கேட்டாலே கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதை உணரலாம்” என தெரிவித்தார்.
39 வயதான மைக்கல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 T20i போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளதுடன், அவருடைய தலைமையில் சொந்த மண்ணில் வைத்து அவுஸ்திரேலிய அணி 2015 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது.
இதனிடையே, குறித்த விருதை ஏற்கனவே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், மார்க் டெய்லர், ஸ்டீவ் வோஹ், அலன் போர்டர் பொப் சிம்சன் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர்.
அத்துடன், இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கருக்கு இந்த உயரிய விருது 2012இல் வழங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<