MI கேப் டவுன் அணிக்காக விளையாடவுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்!

SA T20 League 2023

240

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SA T20 லீக் தொடரில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் MI கேப் டவுன் அணிக்காக விளையாடவுள்ளார்.

IPL தொடரின் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் SA T20 லீக்கின் MI கேப் டவுன் அணியை வாங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் ஜொப்ரா ஆர்ச்சரை தங்களுடைய வைல்ட்கார்ட் ஒப்பந்த வீரராக அணியில் இணைத்துள்ளதாக MI கேப் டவுன் அணி அறிவித்துள்ளது.

T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கைக்கு முதல் சவால்

ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் உபாதையால் எந்தவொரு போட்டித்தொடரிலும் பங்கேற்கவில்லை. எனினும் தற்போது இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக ஜொப்ரா ஆர்ச்சர் பந்துவீசும் காணொளி வெளியாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் ஜொப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதிக்கு திரும்பியுள்ளதாகவும், எனவே அவரை வைல்ட்கார்ட் ஒப்பந்த வீரராக அணியில் இணைத்துள்ளதாகவும் MI கேப் டவுன் அணி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் SA T20 லீக்கில் விளையாடுவதற்கான அனுமதியை ஜொப்ரா ஆர்ச்சருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை வழங்கியுள்ளதாகவும், எனவே அவர் விளையாடுவதில் எந்தவித சிக்கல்களும் இல்லையெனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜொப்ரா ஆர்ச்சர் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<