வர்த்தக டி-20 தொடரின் அரையிறுதியில் சம்பத், டீஜே, ஜோன் கீல்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ அணிகள்

184
Mercantile Tier A T20

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களின் பிரிவு ஏ அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னைய நொக் – அவுட் சுற்றில் இன்று (31) நான்கு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

சம்பத் வங்கி எதிர் மாஸ் சிலுவேட்டா

சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாஸ் சிலுவேட்டா அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சம்பத் வங்கி அணி, சமீன் கந்தனாரச்சி மற்றும் ப்ரமோஷ் பெரேராவின் அரைச்சதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சமீன் கந்தனாரச்சி 71 ஓட்டங்களையும், ப்ரமோஷ் பெரேரா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, சானர நாணயக்கார மற்றும் தனன்ஞய லக்ஷான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

பின்னர் 148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாஸ் சிலுவேட்டா அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் மாஸ் சிலுவேட்டா அணிக்காக அஞ்செலோ இமானுவேல் அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் ஜீவன் மெண்டிஸ், துஷ்மன்த சமீர மற்றும் சச்சித்ர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்

போட்டியின் சுருக்கம்

சும்பத் வங்கி 184/5 (20) – சமீன் கந்தனாரச்சி 71, ப்ரமோஷ் பெரேரா 53, சானர நாணயக்கார 2/19, தனன்ஞய லக்ஷான் 2/42

மாஸ் சிலுவேட்டா 114/10 (17.1)அஞ்செலோ இமானுவேல் 30, ஜீவன் மெண்டிஸ் 2/8, துஷ்மன்த சமீர 2/18, சச்சித்ர பெரேரா 2/25 

போட்டி முடிவு – சம்பத் வங்கி அணி 70 ஓட்டங்களால் வெற்றி


டீஜே லங்கா எதிர் டிமோ

கொழும்பு MCA மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் டீஜே லங்கா அணி 4 ஓட்டங்களினால் டிமோ அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டீஜே லங்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சாலிக கருணாநாயக்க 37 ஓட்டங்களையும், மினோத் பானுக 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்

டிமோ அணியின் பந்துவீச்சு சார்பாக நிஷல தாரக, திக்ஷி டி சில்வா மற்றும் கவிஷ் அன்ஜுல ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பதம்பார்த்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 175  ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டிமோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி வெற்றியிலக்கினை நெருங்கியது

எனினும், அவ்வணியினால் எதிரணியின் அபார பந்துவீச்சு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன்படி, 4 ஓட்டங்களால் டீஜே லங்கா அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது

டிமோ அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த புலின தரங்க 34 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, நிபுன் கருணாநாயக்க ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் குவித்தார்

இதேவேளை டீஜே லங்கா அணிக்காக சச்சித்ர சேனாநாயக்க 3 விக்கெட்டுக்களையும், சலன டி சில்வா மற்றும் சாலிய சமன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

டீஜே லங்கா 175/8 (20)சாலிக்க கருணாநாயக்க 37, மினோத் பானுக 25, நிஷல தாரக 2/26, திக்ஷில டி சில்வா 2/30, கவிஷ் அன்ஜுல 2/42

டிமோ 171/7 (20)புலின தரங்க 34, ரமேஷ் மெண்டிஸ் 24, நிபுன் கருணாநாயக்க 23*, திக்ஷி டி சில்வா 20, சச்சித்ர சேனாநாயக்க 3/23, சலன டி சில்வா 2/39, சாலிய சமன் 2/3

போட்டி முடிவு – டீஜே லங்கா அணி 4 ஓட்டங்களினால் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் கொமர்ஷல் கிரெடிட்

கொழும்பு MCA மைதானத்தில நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜோன் கீல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணி இஷான் ஜயரத்ன பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் கொமர்ஷல் கிரெடிட் அணியின் விஷ் பெர்னாண்டோ 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், டில்ஷான் முனவீர மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் வீழ்த்தினர்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொமர்ஷல் கிரெடிட் அணி, எதிரணியின் அபார பந்து வீச்சுக்கு தடுமாற்றத்துடன் முகங்கொடுத்து, 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பில் அஷேன் பண்டார 34 ஓட்டங்களையும், சாமர கபுகெதர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

பந்து வீச்சில் சிராஸ் மொஹமட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பானுக ராஜபக்ஷ 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், விகும் சன்ஜய 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம் 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 153/10 (20)இஷhன் ஜயரத்ன 50, விகும் சன்ஜய 21, ஜெஹான் டேனியல் 20, விஷ; பெர்னாண்டோ 3/26, டில்ஷhன் முனவீர 2/05, சதுரங்க டி சில்வா 2/26

கொமர்ஷல் கிரெடிட் 124/10 (18.1)அஷேன் பண்டார 34, சாமர கபுகெதர 31, வனிந்து ஹசரங்க 31, சிராஸ் மொஹமட் 2/17, பானுக ராஜபக்ஷ 2/30, விகும் சன்ஜய 2/31

போட்டி முடிவு – ஜோன் கீல்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி


மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிசெல்லா எதிர் எல்பி பினான்ஸ்

சிலாபம் மேரியன்ஸ் கழக மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணி எல்பி பினான்ஸ் அணியை 19 ஓட்டங்களால் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் ஹோல்டிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது

மாஸ் ஹோல்டிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் டி.எம் சம்பத் 36 ஓட்டங்களையும், சாமர சில்வா ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும், பியமால் பெரேரா 31 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 175 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்பி பினான்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்போது எல்பி பினான்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இசுரு உதான 55 ஓட்டங்களைப் பெற்றார்

இதேநேரம், அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மாஸ் ஹோல்டிங்ஸ் அணி சார்பாக நிபுன் ரன்சிக 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், டி.எம் டில்ஷான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் 174/7 (20)டி.எம் சம்பத் 36, சாமர சில்வா 35*, பியமால் பெரேரா 31, ஷெஹான் ஜயசூரிய 2/26

எல்பி பினான்;ஸ் 155/10 (19.2)இசுரு உதான 55, ஷெஹான் ஜயசூரிய 38, நிபுன் ரன்சிக 4/28, டி.எம் டில்ஷhன் 2/10 

போட்டி முடிவு – மாஸ் ஹோல்டிங்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி