வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான புட்சால் தொடர் இவ்வார இறுதியில்

267

வர்த்தக கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இரண்டாவது புட்சால் தொடர் ஜனவரி 20ஆம் திகதி கொழும்பு இரண்டில் அமைந்துள்ள Futsal World மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கொழும்பை சம்பியனாக்கிய ரினெளன் முன்னாள் வீரர் பசால்

இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகாலத்திற்கான தொடரின் தீர்மானம் மிக்க ஆட்டத்தில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த முறை இடம்பெற்ற தொடரானது 32 அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் போட்டிகள் இடம்பெற்றன. எனினும், இம்முறை அதில் மாற்றம் செய்யப்பட்டு போட்டிகளை ஒரே தினத்தில் முடிக்கும் வகையில் மொத்தமாக 16 அணிகள் பங்கு பெறும். அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறும்.

வர்த்தக கால்பந்து சங்கமானது இம்முறை தமது 100 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. எனவே, இந்த வருடம் அச்சங்கத்தினருக்கு முக்கிய ஆண்டாக அமைகின்றது.  

முதல் முறை இடம்பெற்ற புட்சால் தொடரில் அமானா தகாபுல் நிறுவனம் சம்பியனாகவும், எல்.பி பினான்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. எனினும் இம்முறை தொடரில் நடப்புச் சம்பியன் அமானா தகாபுல் அணி பங்கு கொள்ளவில்லை.

இம்முறை தொடரில் முதல் சுற்றான குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும். காலிறுதியில் வெற்றி பெறும் அணிகள் கோப்பைக்கான பிரிவில் (Cup category) மோதும் அதேவேளை, காலிறுதியில் தோல்வியடையும் அணிகள் தட்டிற்கான பிரிவில் (Plate category) மோதும்.

தொடர்ந்து இரண்டாவது முறை நடைபெறும் மேமன் புட்சால் போட்டித்தொடர்

மேமன் சமூக அணிகள் போட்டியிடும் மேமன் புட்சால் போட்டித்தொடர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும்,

கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், அதன்மூலம் நாட்டு மக்களுக்கு மத்தியில் விளையாட்டின் திறனை அதிகரிக்கும் நோக்குடனேயே இந்த போட்டித் தொடர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தொடருக்கான குழு நிலை அணிகள்

குழு A HSBC, கலதாரி ஹோட்டல், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், எல்.பி பினான்ஸ்

குழு B நேஷன் ட்ரஸ்ட் வங்கி, DFCC வங்கி, ITX 360, WNS க்லோபல்

குழு C அமானா வங்கி, எஸ்கிமோ பெஷன்ஸ், ஸ்டாண்டட் ஷார்டட் வங்கி, சம்பத் வங்கி  

குழு D எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ், செலின்கோ காப்புறுதி, வேலர்துசா LTD, கொமர்ஷல் லீசிங்

ThePapare Tamil weekly sports roundup – Episode 11

புதிய மாற்றங்களுடனான இலங்கை அணியின் பங்களாதேஷ் பயணம், இளையோர் உலகக் கிண்ணம், கற்புலனற்றோர் உலகக் கிண்ணம் மற்றும் டயலொக் சம்பியன்ஸ் லீக் இறுதி முடிவுகள் என்பன இவ்வாற ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில்.