மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினத்தில் மேலும் 2 போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஆகிய அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
டிமோ லங்கா எதிர் ஹற்றன் நஷனல் வங்கி
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் டிமோ லங்கா மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி அணிகளுக்கு இடையிலான போட்டி மொரட்டுவ டி சொயிஸா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹற்றன் நஷனல் வங்கி அணி முதலில் டிமோ லங்கா அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டியின் நடுவர்கள் : சமிந்த ஹத்துருசிங்ஹ / தீபால் குணவர்தன
ஹற்றன் நஷனல் வங்கி அணியின் அழைப்பை ஏற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டிமோ லங்கா அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. டிமோ லங்கா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜேசன் பெரேரா 85 ஓட்டங்களையும், நிபுன் கருணாநாயக்க 25 ஓட்டங்களையும், பிரமோத் ஹெட்டியாவத்த 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹற்றன் நஷனல் வங்கி அணியின் பந்து வீச்சில் மின்ஹாஜ் ஜலீல் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், புத்தி பெரேரா 2 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
பின்னர் 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஹற்றன் நஷனல் வங்கி அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று ஒரு பந்து மீதம் இருக்க 1 விக்கெட்டால் வெற்றி பெற்றது.
ஹற்றன் நஷனல் வங்கி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அஷான் பெர்னாண்டோ ஆட்டம் இழக்காமல் 78 ஓட்டங்களைப் பெற்று தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.புலின தரங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
போட்டியின் சுருக்கம்
டிமோ லங்கா – 187/10 (43.5)
ஜேசன் பெரேரா 85, நிபுன் கருணாநாயக்க 25, பிரமோத் ஹெட்டியாவத்த 23
மின்ஹாஜ் ஜலீல் 2/45, புத்தி பெரேரா 3/2
ஹற்றன் நஷனல் வங்கி – 191/9 (49.5)
அஷான் பெர்னாண்டோ 78 *
புலின தரங்கா 3/35, ரமேஷ் மெண்டிஸ் 2/45
ஹற்றன் நஷனல் வங்கி அணி 1 விக்கெட்டால் வெற்றி
டெக்ஸ்சர்ட் ஜேர்சி எதிர் ஜோன் கீல்ஸ்
மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி மற்றும் ஜோன் கீல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் அணி முதலில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
இதன்படி முதலில் ஆடிய டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி 48.5 ஓவர்களில் 234 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டிலான் ஜயலத் 58 ஓட்டங்களையும், மிலிந்த சிறிவர்தன 49 ஓட்டங்களையும், விசாத் ரந்திக 31 ஓட்டங்களையும் பெற்றனர். ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சில் விக்கும் பண்டார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 235 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஜோன் கீல்ஸ் அணியினர் 35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று 86 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
ஜோன் கீல்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் லஹிரு மிலந்த மீண்டும் ஒருமுறை மிக அபாரமாக ஆடி ஆட்டம் இழக்காமல் 121 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர பானுக ராஜபக்ஷ 47 ஓட்டங்களையும், ரொசான் சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர். டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியின் பந்து வீச்சில் உபுல் பண்டார 17 ஓட்டங்க்ளுக்கு 2 விக்கெட்டுகளையும், லஹிரு சமரக்கோன் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
போட்டியின் சுருக்கம்
டெக்ஸ்சர்ட் ஜேர்சி – 234/10 (48.5)
டிலான் ஜயலத் 58, மிலிந்த சிறிவர்தன 49, விசாத் ரந்திக 31
விக்கும் பண்டார 2/35
ஜோன் கீல்ஸ் – 236/4 (35.4)
லஹிரு மிலந்த 121 *, பானுக ராஜபக்ஷ 47, ரொசான் சில்வா 37
உபுல் பண்டார 2/17, லஹிரு சமரக்கோன் 2/47
ஜோன் கீல்ஸ் அணி6 விக்கெட்டுகளால் வெற்றி