ஜோன் கீல்ஸ், எல். பி பினான்ஸ் அணிகளுக்கு இலகு வெற்றி

401

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25ஆவது தடவையாகவும் நடைபெறும் பிரிவு – A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

ஹட்டன் நஷனல் வங்கி எதிர் எல்.பி பினான்ஸ்

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில் டக்வெத் லூயிஸ் முறையில் எல்.பி பினான்ஸ் அணி, ஹட்டன் நஷனல் வங்கியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்

மழை காரணமாக அணிக்கு 44 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற எல்.பி பினான்ஸ் அணி முதலில் ஹட்டன் நஷனல் வங்கியினை துடுப்பாட பணித்தது.

முதலில் துடுப்பாடிய ஹட்டன் நஷனல் வங்கி எதிரணிப் பந்து வீச்சுக்கு தடுமாறி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 107 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

திறமையாக செயற்பட்ட எல்.பி பினான்ஸ் அணியின் பந்து வீச்சில் அஞ்செலோ பெரேரா 3 விக்கெட்டுக்களையும், சிரான் பெர்னாந்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து இலகு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 108 ஓட்டங்களை எல்.பி பினான்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.  

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி – 107 (41.2) புத்தி பெரேரா 28*, அஞ்செலோ பெரேரா 3/20, சிரான் பெர்னாந்து  2/08

எல்.பி பினான்ஸ் – 108/4 (18.5) சஜீவ வீரக்கோன் 2/34


டிமோ எதிர் கொமர்ஷல் கிரடிட்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் டிமோ நிறுவனம் 41 ஓட்டங்களால் கொமர்ஷல் கிரடிட் அணியினை தோற்கடித்தது.

முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த டிமோ அணியில் யாசித் அபரத்ன 72 ஓட்டங்களை குவித்தும், ஹஷன் ராமநாயக்க பெறுமதியான 50 ஓட்டங்களை விளாசியும் அணிக்கு உறுதியளித்தனர்.

இன்னும் பின்வரிசையில் ரொமேஷ் மெண்டிஸ் 49 ஓட்டங்களுடன் உதவி செய்ய 50 ஓவர்கள் நிறைவில் டிமோ நிறுவனம் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 294 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

கொமர்ஷல் கிரடிட் அணியின் பந்து வீச்சு சார்பாக தில்ஷான் முனவீர 64 ஓட்டங்ககளுக்கு 3 விக்கெட்டுக்களையும், சுராஜ் ரன்தீவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

தினேஷ் சந்திமாலின் சதத்துடன் இமாலய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை

தொடர்ந்து சவலான வெற்றி இலக்காக கருதப்பட்ட 295 ஓட்டங்களை பெற பதிலுக்கு ஆடிய கொமர்ஷல் கிரடிட் வீரர்கள் 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 253 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவினர்.  

கொமர்ஷல் கிரடிட் அணி தோல்வியினை தழுவிய போதிலும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஜெஹான் முபாரக் 58 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதோடு கவிஷ்க அஞ்சுல, ப்ரமோத் ஹெட்டிவத்த மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி டிமோ அணிக்கு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

டிமோ நிறுவனம் – 294 (50) யாசித் அபேரத்ன 72, ஹஷன் ராமநாயக்க 50, ரமேஷ் மெண்டிஸ் 49*, திக்ஷில டி சில்வா 40, தில்ஷான் முனவீர 3/64, சுராஜ் ரன்தீவ் 2/33

கொமர்ஷல் கிரடிட் – 253 (45.5) ஜெஹான் முபாரக் 58, அஷான் பிரியன்ஞன் 38, லஹிரு மதுசங்க 35,  இமேஷ் உதயங்க 34, கவிஷ்க அஞ்சுல 2/34, ப்ரமோத் ஹெட்டிவத்த 2/42, சம்மு அஷான் 2/20


ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் எதிர் கென்ரிச் பினான்ஸ்

சரவணமுத்து மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் டக்வெத் லூயிஸ் முறை மூலம் கென்ரிச் பினான்ஸ் அணியினை 103 ஓட்டங்களால் ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணி இலகுவாக வெற்றி கொண்டது.

காலநிலை சீர்கேட்டால் இன்னிங்சுக்கு 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணி முதலில் துடுப்பாடி 45 ஓவர்கள் நிறைவுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது. ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணியின் துடுப்பாட்டத்தில் ஜொலித்த பானுக்க ராஜபக்ஷ 74 ஓட்டங்களினையும், இஷான் ஜயரத்ன 60 ஓட்டங்களினையும் பெற்றனர். கென்ரிச் பினான்ஸ் அணியின் பந்து வீச்சில் ப்ரமோத் மதுசன் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

மாஸ் யுனிச்செல்லா அணிக்கு மற்றுமொரு இலகு வெற்றி

இதனையடுத்து சற்று சவாலான வெற்றியிலக்கான 260 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய கென்ரிச் பினான்ஸ் நிறுவனம் எதிரணியின் அபாரப் பந்து வீச்சினால் 37.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. கென்ரிச் பினான்ஸ் அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட இஷான் ஜயரத்ன மற்றும் சமிகர எதிரிசிங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டி போட்டியின் வெற்றியாளர்களாக தமது அணியினை மாற்றினர்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹொல்டிங்  – 259/7 (45) பனுக்க ராஜபக்ஷ 74, இஷான் ஜயரத்ன 60*, அக்சு பெர்னாந்து 42, லஹிரு மிலன்த 33, ப்ரமோத் மதுசான் 3/56

கென்ரிச் பினான்ஸ் – 158 (37.1) கசுன் விதுர 35, அலங்கார அசங்க 23, இஷான் ஜயரத்ன 3/20, சமிகர எதிரிசிங்க 3/22, மதுக லியனபத்திரனகே 2/31