கசுன் விதுராவின் சதத்துடன் கென்றிச் அணி, மாஸ் சிலுவெட்டா அணியை இலகுவாக வெற்றி கொண்ட அதே வேளை, கேஷான் விஜரத்னவின் அசத்தலான பந்து வீச்சினால் LB பைனான்ஸ் அணி, ஹேலீஸ் அணியை தோற்கடித்து மேகன்டைல் B டிவிசன், மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
மாஸ் சிலுவெட்டா – கென்றிச் பினான்ஸ்
கென்றிச் பைனான்ஸ் அணியின் அலங்கார அசங்க (17/3), பிரபாத் ஜயசூரியரின் (41/2) ஆகியோரின் நேர்த்தியான பந்துவீச்சினால் மாஸ் சிலுவெட்டா அணி 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
மாஸ் சிலுவெட்டா அணியின் நடுவரிசை துடுப்பாட்ட வீரரான தேனுவான் ராஜாகருண மட்டுமே 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஏனையோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினர்.
கென்றிச் பைனான்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில், அணிக்கு தலைமை தாங்கி வெகு சிறப்பாக ஆடிய கசுன் விதுரா ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணி 21ஆம் ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெஹான் பெர்னாண்டோ மற்றும் பவான் விக்கரமசிங்க முறையே 37 மற்றும் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் சுருக்கம்
மாஸ் சிலுவெட்டா: 177 (45) – தேனுவான் ராஜாகருண 41, பாபசார வடுகே 27, ஏஞ்சலோ ஜெயசிங்க 24, அலங்கார அசங்க 17/3, பிரபாத் ஜயசூரிய 41/2
கென்றிச் பைனான்ஸ்: 181/2 – கசுன் விதுர 108*, ஷெஹான் பெர்னாண்டோ 37, பவான் விக்கரமசிங்க 30, ஏஞ்சலோ ஜெயசிங்க 03/1
போட்டி முடிவு: கென்றிச் பைனான்ஸ் அணி, மாஸ் சிலுவெட்டா அணியை 8 விக்கெட்டுக்களால் வென்றது.
LB பைனான்ஸ் – ஹேலீஸ்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற LB பைனான்ஸ், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களம் இறங்கிய LB பைனான்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்று கொடுத்தனர்.
சதீர சமரவிக்ரம (69) மற்றும் லக்சான் ரொட்ரிகோ (49) ஆகியோர் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். எனினும், அதன் பின் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் வீழ்ந்ததினால், 47.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து LB பைனான்ஸ் அணி 243 ஒட்டகளைப் பெற்றது.
பின்னர், கேஷான் விஜரத்னவின் நேர்த்தியான பந்துவீச்சில் (33/5), ஹேலீஸ் அணி தகர்க்கப்பட்டு, 45.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஹேலீஸ் அணி சார்பாக குறிப்பிடும் வகையில் மதுரங்க சொய்சா(82) மற்றும் ரோனில் குரே(43) ஆகியோரே கூடிய ஓட்டங்களை பெற்றனர். ஏனையோர் LB பைனான்ஸ் அணியின் சிறந்த பந்து வீச்சுக்கு இரையாகினர்.
போட்டியின் சுருக்கம்
LB பைனான்ஸ்: 243 (47.1) – சதீர சமரவிக்ரம 69, மற்றும் லக்சான் ரொட்ரிகோ 49, சரித் சுதாகர 32, அலி கான் 56/3, நிமேஷா குண்சிங்க 39/2, ரவிந்து விஜேரத்ன 29/2
ஹேலீஸ் குழு: 217 (45.4) – மதுரங்க சொய்சா 82, ரோனில் குரே 43,
கேஷான் விஜரத்ன 33/5, சரித் சுதாகர 43/2
போட்டி முடிவு: LB பைனான்ஸ் 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதன்படி, மேகன்டைல் B டிவிசன் இறுதிப்போட்டிக்கு LB பைனான்ஸ் மற்றும் கென்றிச் பைனான்ஸ் அணிகள் தெரிவாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி மேகன்டைல் கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த இறுதப் போட்டி இடம்பெறும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்