கடந்த ஆண்டு இந்திய நட்சத்திர துடுப்பாட்ட விராட் கோஹ்லிக்கு பின்னர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப வரிசைத் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இந்த ஆண்டும் அதேமாதிரியான சிறந்த பதிவு ஒன்றை வைக்கும் இலக்குடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள்…….
டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டு 3 சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்கள் என அபாரம் காட்டிய குசல் மெண்டிஸ், 1,023 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த ஆண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளின் எட்டு இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள அவர் 175 ஓட்டங்களையே பெற்றிருக்கின்றார். இந்த 175 ஓட்டங்களுக்குள் குசல் மெண்டிஸ் தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற காரணமாக இருந்த 84 ஓட்டங்களும் அடங்குகின்றது.
“(இந்த ஆண்டில் நடைபெற்ற) நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் (என்னால்) போதியளவு ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. எனினும், இன்னும் ஏழு போட்டிகள் இந்த ஆண்டில் எஞ்சியிருக்கின்றன. நான் எஞ்சியிருக்கும் இப்போட்டிகளில் (கடந்த ஆண்டு போன்று) 1,000 ஓட்டங்களை குவித்து தொடர்ந்தும் அணிக்கு பங்களிப்புச் செய்ய விரும்புகின்றேன். “ என குசல் மெண்டிஸ் குறிப்பிட்டார்.
இதேநேரம் தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆரம்பத்தில் குசல் மெண்டிஸ் உடன், டேல் ஸ்டெய்ன் அடிக்கடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவரது கவனத்தை கலைக்க முற்பட்டிருந்தார். இந்த நிகழ்வினால் கவனம் குலையாத மெண்டிஸ் தனது துடுப்பாட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்திய காரணத்தினால் மட்டுமே இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தென்னாபிரிக்காவில் வரலாறு படைத்திருந்தது.
Photos : Sri Lanka vs South Africa 2nd Test 2019 | Day 3
ThePapare.com | 23/02/2019 | Editing and re-using images without….
போட்டியின் மூன்றாம் நாளில் வெற்றிக்கு இன்னும் 137 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு தென்னாபிரிக்க தமது திறமைமிக்க வேகப்பந்து வீச்சாளர்களான ககிஸோ றபாடா மற்றும் டூஆன்னே ஒலிவியர் போன்றோருடன் நெருக்கடி தர ஆரம்பித்தது.
தொடர்ந்து தென்னாபிரிக்கா இந்த தசாப்தத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெய்னை பந்துவீச அழைத்திருந்தது. எனினும், ஸ்டெய்னை கச்சிதமாக எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் அவர் வீசிய ஓவர் ஒன்றில் தொடர்ச்சியாக மூன்று பெளண்டரிகள் விளாசி அவருக்கு அழுத்தம் தரத் தொடங்கினார். மெண்டிஸின் அடுத்தடுத்த பெளண்டரிகளால் இலங்கை அணி அடித்தாட தொடங்கிவிட்டது என தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டூ ப்ளேசிஸ் தமது களத்தடுப்பாளர்களை எல்லைகளுக்கு அப்பால் அனுப்பினார். எனினும், இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அணி ஒன்று, இரண்டு என நிதானமாக குறுகிய ஓட்டங்களுடன் போட்டியில் முன்னேறி வெற்றியை சுவைத்தது.
“மிகவும் திறமை வாய்ந்த தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களை பார்க்கும் போது எனக்கு த்ரில்லரான உணர்வு ஒன்று இருந்தது. போட்டியின் ஆரம்ப நேரங்களில் அவர்கள் எப்போதும் சரியாக இருப்பதோடு, மிகப் பெரிய சவாலையும் தரக்கூடியவர்கள். போட்டியில் ஆடிக்கொண்டிருக்கும் போது நிறைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. எனினும், நான் எதனையும் பொருட்படுத்தாது எனது கவனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டு இருந்தேன். நான் முதலில் டீன் எல்காரிடம் சில வார்த்தைகளை பரிமாறினேன். பின்னர் ஸ்டேயினிடம் சில வார்த்தைகளை கதைத்தேன். நான் ஸ்டெயினிடம் இதனை எல்லாம் ஆரம்பித்து வைத்தது எல்கார் தான் என்பதை ஞாபகமூட்டினேன். இதெல்லாம், கிரிக்கெட் போட்டிகளில் வழமையாக நடக்கும் விடயங்களே. ஆனால், அவர்கள் உண்மையில் நல்ல மனிதர்கள். நாங்கள் வெற்றி பெற்று சிறிது நேரத்திலேயே அவர்கள் என்னை வாழ்த்தினார்கள். அவர்கள் கடினமாக முயற்சி எடுத்து விளையாடுவதோடு இந்த கிரிக்கெட் விளையாட்டின் தூதுவர்களாகவும் உலகில் இருக்கின்றனர். “
தொடரை இழந்த தென்னாபிரிக்க அணிக்கு தரவரிசையில் பின்னடைவு
புதிய டெஸ்ட் அணிகளின் தரவரிசையின்படி சொந்த…..
தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் மெண்டிஸ் போதியளவு எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்க தவறிய போதிலும் அணியில் தொடர்ந்து இணைக்கப்பட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கிய காரணத்திலாயே இப்படியான ஒரு அடைவை பெற முடிந்தது என குசல் மெண்டிஸ் அதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்திருக்கின்றார்.
“ கடந்த ஆண்டில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வந்த சந்திக ஹதுருசிங்க எனக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கினார். அதனை அடுத்து அவர் தொடர்ச்சியாக எனக்கு நம்பிக்கை வழங்கி வருகின்றார். நாங்கள் சில இடங்களில் வித்தியாசமான கருத்துக்களுடன் காணப்பட்ட போதிலும், ஒரு பயிற்சியாளராக அவர் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து “
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<