மேமன் புட்சால் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற கன்னர்ஸ் அணி

226
  • Renegades - Plate Champions (2nd Memon Futsal Tournament)

புட்சால் வேல்டில் நடைபெற்ற 2ஆவது மேமன் புட்சால் போட்டித் தொடரில் கன்னர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதோடு ரெனேகட்ஸ் அணி பிளேட் சம்பியனானது.

இரண்டு இறுதிப் போட்டிகளும் ஆரம்ப விசில் ஊதப்பட்டது தொடக்கம் பரபரப்பாக நடைபெற்றதோடு இரு சம்பியன் அணிகளும் தமது போட்டிகளில் வெற்றியை சுவீகரிக்க கடுமையாகப் போராடின.   

விறுவிறுப்பான சம்பியன் கிண்ணத்திற்கான போட்டியில் கன்னர்ஸ் அணி சம்பியனாகும் அதிர்ஷ்டத்தை பெற்றது. புட்சால் அமிகோஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சமநிலையை முறிக்கும் ஐந்து பெனால்டிகளும் போடப்பட்ட நிலையில் ஆட்டம் இழுபறிக்கு உள்ளானது. இதனால் நாணய சுழற்சியிலேயே முடிவு தீர்மானிக்கப்பட்டது. போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டன. அஷ்பாக் இஸ்மைல் கன்னர்ஸ் அணிக்காக கோல் புகுத்தியதோடு அப்துர் ரஹ்மான் புட்சால் அமிகோஸ் அணிக்காக கோல் போட்டார்.  

இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனை எதிர்கொள்ளவுள்ள யாழ் பத்திரிசியார்

ரெனேகட்ஸ் மற்றும் CKR அணிகளுக்கு இடையிலான பிளேட் கேடயத்திற்கான இறுதிப் போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் கோல் போடாத நிலையில் போட்டி சமநிலையானது. எனினும் சமநிலையை முறிக்கும் பெனால்டியில் CKR அணிக்கு எதிராக ரெனேகட்ஸ் 3 – 2 என்ற கோல்களால் வெற்றி பெற்று பிளேட் சம்பியனானது.  

நான்கு அணிகள் பங்கேற்ற கனிஷ்ட போட்டித் தொடரில் கில்லர் க்ளீட்ஸ் அணி மேமன் நைட் ரைடர்ஸ் அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியனானது.  

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக நடத்தப்படும் மேமன் புட்சால் போட்டித் தொடர் டார்லி வீதியில் உள்ள புட்சால் வேல்டில் நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர்கள் என மேமன் சமூக உறுப்பினர்கள் போட்டிகளை கண்டுகளித்தனர். இந்த குறுகிய கால போட்டித் தொடர் உற்சாகத்தை ஏற்படுத்தியது.