T-20 உலகக் கிண்ணத்தில் ஏற்படவுள்ள வரலாற்று திருப்புமுனை

1067

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 7ஆவது இருபதுக்கு-20 (T-20) உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் திகதி, நகரங்கள் மற்றும் மைதானங்கள் தொடர்பான விபரங்களை ஐ.சி.சி. இன்று(30) உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.

[rev_slider LOLC]

ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரருக்கு கடும் எச்சரிக்கை

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை (27) நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டியின்வி….

 

முன்னதாக நடைபெற்ற 6 T-20 உலகக் கிண்ண போட்டிகளும் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு தொடர்களும் ஒரே காலப்பகுதியில் நடைபெற்று வந்தன. ஆனால் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T-20 உலகக் கிண்ண போட்டிகள் முதற்தடவையாக தனித்தனி தொடராக நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, மகளிருக்கான T-20 உலகக் கிண்ண போட்டிகள் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், ஆடவருக்காக போட்டித் தொடர் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்படி, 16 ஆடவர் அணிகள் மற்றும் 10 மகளிர் அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள 13 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன. அடிலெய்ட், பிரிஸ்பேன், கென்பெரா, ஜீலோங், ஹோபார்ட், மெல்பேர்ன் பேர்த் மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை ஆடவர் மற்றும் மகளிருக்கான இறுதிப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேநேரம், சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் திகதி மகளிருக்கான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மகளிருக்கான அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஆடவருக்கான அரையிறுதிப் போட்டிகள் அடிலெய்ட் ஓவல் மற்றும் சிட்னி கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

முக்கோணத் தொடர் சம்பியனுக்கு பங்களாதேஷ் டெஸ்ட்டில் சவால் தருமா?

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி அங்கு இடம்பெற்ற முக்கோண … .

இதுதொடர்பில் ஐ.சி.சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கருத்து வெளியிடுகையில், ”2020இல் நடைபெறவுள்ள இத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதிலும் வரலாற்றில் முதற்தடவையாக ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகளை வெவ்வேறாக நடத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இதனால் எதிர்வரும் காலங்களில் மகளிர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தையும், வரவேற்பையும் எதிர்பார்க்க முடியும்” எனவும் அவர் தெரிவித்;தார்.

இந்நிலையில் குறித்த தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடைந்ததை அடுத்து போட்டி அட்டவணை வெளியிடப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.