கடந்த பருவகாலத்தில், இங்கிலாந்து கவுண்டி சம்பியன்களாக மாறிய எசெக்ஸ் (Essex) கழகம் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) விளையாடவிருந்த நான்கு நாட்கள் கொண்ட பாரம்பரிய முதல்தரப் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
MCC யின் சம்பியன் கவுன்டி போட்டி இலங்கையில்: சங்கா அணித் தலைவர்
மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அதன் அடுத்த……
ஒவ்வொரு பருவகாலத்திலும் கவுண்டி சம்பியனாக மாறும் அணியுடன், கிரிக்கெட்டின் விதிமுறைகளை தீர்மானிக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடுவது வழமையாகும்.
அந்தவகையில், இந்தப் பருவகாலத்தில் கவுண்டி சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் அணியும். மெர்லிபோன் கிரிக்கெட் கழகமும் (MCC) விளையாடவிருந்த முதல்தரக் கிரிக்கெட் போட்டி இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் மார்ச் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பீதியினால் இப்போட்டியானது தற்போது இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.
இப்போட்டியில் விளையாடவிருந்த மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார மூலம் வழிநடாத்தப்படவிருந்தது. போட்டி இரத்துச் செய்யப்பட்டிருக்கும் காரணத்தினால் இலங்கையின் முன்னாள் நட்சத்திரமான குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை மீண்டும் பார்க்க இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்திருந்த வாய்ப்பு தற்போது இல்லாமல் போயுள்ளது.
அதேநேரம். இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இடம்பெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக முன்னர் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் 10 பேர் வரையில் நோயாளிகளாக இனங்காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<