சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 29ஆவது தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் (MCA) இடையிலான சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் அணி MODE Engineering அணிக்கு எதிராக 4 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, தொடரின் சம்பியன் பட்டத்தினையும் தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றது.
MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ், MODE அணிகள்
கொழும்பு MCA மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, MODE Engineering அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் அணிக்கு வழங்கியது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 156 ஓட்டங்கள் எடுத்தது.
ஜோன் கீல்ஸ் (A) அணியின் துடுப்பாட்டம் சார்பில் சஜித்த ஜயத்திலக்க 62 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, MODE Engineering அணியின் பந்துவீச்சில் அருள் பிரகாசம், சன்தகன் பத்திரன மற்றும் தீஷன் விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 157 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய MODE Engineering அணி, வெற்றி இலக்கிற்காக இறுதிவரை போராடிய போதும் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து, போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
MODE Engineering அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் தாண்டிய துஷான் ஹேமன்த 7 சிக்ஸர்கள் அடங்கலாக 20 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்திருந்த போதும் அவரது அரைச்சதம் வீணாகியது.
இதேநேரம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியின் பந்துவீச்சில் இஷான் ஜயரட்ன 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், மலிங்க அமரசிங்க மற்றும் சஜித்த ஜயத்திலக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் சுருக்கம்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் (A) – 156 (19.5) சஜித்த ஜயத்திலக்க 62, அருள் பிரகாசம் 26/2, தீசன் விதுஷன் 26/2, சன்தகன் பத்திரன 36/4
MODE Engineering – 152/9 (20) துஷான் ஹேமன்த 52, இஷான் ஜயரட்ன 14/3, மலிங்க அமரசிங்க 25/2, சஜித்த ஜயத்திலக்க 25/2
முடிவு – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் (A) அணி 4 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sheran Fonseka | c Dushan Hemantha b Arul Pragash | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c Shehan Fernando b Sandakan Pathirana | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Kavin Bandara | c & b Arul Pragash | 43 | 33 | 2 | 2 | 130.30 |
Ahan Wickramasinghe | c Sasindu Nanayakkara b Sandakan Pathirana | 11 | 7 | 0 | 1 | 157.14 |
Navod Paranavithana | b Mohamed Imthiyas Slasa | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Sachitha Jayathilake | c Mohamed Imthiyas Slasa b Theeshan Vithushan | 62 | 39 | 0 | 7 | 158.97 |
Ishan Jayaratne | c Akeel Inham b Dushan Hemantha | 9 | 7 | 0 | 0 | 128.57 |
Akila Dananjaya | c Mohamed Imthiyas Slasa b Theeshan Vithushan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Malinga Amarasinghe | run out () | 12 | 9 | 1 | 0 | 133.33 |
Duvindu Tillakaratne | run out () | 8 | 10 | 0 | 0 | 80.00 |
Malindu Shehan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 157/10 (19.5 Overs, RR: 7.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Arul Pragash | 4 | 0 | 26 | 2 | 6.50 | |
Sandakan Pathirana | 3.5 | 0 | 33 | 2 | 9.43 | |
Mohamed Imthiyas Slasa | 4 | 0 | 38 | 1 | 9.50 | |
Theeshan Vithushan | 4 | 0 | 26 | 2 | 6.50 | |
Dushan Hemantha | 4 | 0 | 30 | 1 | 7.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Thevindu Dickwella | c Duvindu Tillakaratne b Malinga Amarasinghe | 14 | 15 | 2 | 0 | 93.33 |
Shehan Fernando | c & b Ishan Jayaratne | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Akeel Inham | b Ishan Jayaratne | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Sasindu Nanayakkara | lbw b Akila Dananjaya | 28 | 32 | 0 | 1 | 87.50 |
Sajith De Silva | b Sachitha Jayathilake | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Dushan Hemantha | c Akila Dananjaya b Malindu Shehan | 54 | 20 | 0 | 4 | 270.00 |
Sandakan Pathirana | b Malinga Amarasinghe | 11 | 12 | 0 | 1 | 91.67 |
Isitha Wijesundera | c Navod Paranavithana b Ishan Jayaratne | 10 | 8 | 0 | 1 | 125.00 |
Arul Pragash | c Ahan Wickramasinghe b Sachitha Jayathilake | 12 | 12 | 2 | 0 | 100.00 |
Mohamed Imthiyas Slasa | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Extras | 11 (b 0 , lb 3 , nb 1, w 7, pen 0) |
Total | 152/9 (20 Overs, RR: 7.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ishan Jayaratne | 4 | 1 | 14 | 3 | 3.50 | |
Malindu Shehan | 4 | 0 | 37 | 1 | 9.25 | |
Malinga Amarasinghe | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Akila Dananjaya | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Sachitha Jayathilake | 3 | 0 | 29 | 2 | 9.67 | |
Duvindu Tillakaratne | 1 | 0 | 16 | 0 | 16.00 |