சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவங்களுக்கு இடையிலான பிரிவு A ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரண்டு காலிறுதிப் போட்டிகளின் முடிவு கிடைக்காததால் லீக் திறமையின் அடிப்படையில் டிமோ மற்றும் மாஸ் யுனிசெலா அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிசேலா மற்றும் ஹேலீஸ் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி சீரற்ற காலநிலையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிப்பட்டது. எனினும் யுனிசேலா அணி லீக் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமை அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.
வர்த்தக ஒரு நாள் தொடரின் அரையிறுதியில் மாஸ் சிலுவேட்டா, கொமர்ஷல் கிரடிட் அணிகள்
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் பிரிவு A அணிகளுக்கு இடையிலான
மறுபுறம் டிமோ மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டிக்கும் மழை குறுக்கிட்டது. கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டிமோ அணி அபாரமாக ஆடி 7 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது. கவிஷ்க அஞ்சுல அதிகபட்மாக 36 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய ஜோன் கில்ஸ் ஹோல்டிங் 11 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது மழை குறுக்கிட்டதை அடுத்து முடிவு இன்றி போட்டி கைவிடப்பட்டது. எனினும் கடந்த போட்டிகளில் வெளியிட்ட திறமை அடிப்படையில் டிமோ அணிக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்தது.