வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகள் சனிக்கிழமை (29) நடைபெற்றன. இதில் இலங்கை தேசிய அணிக்கு ஓட்டம் பெற தடுமாறி வரும் குசல் மெண்டிஸ் அபார சதம் பெற்று எல்.பி. பினான்ஸ் அணிக்கு மற்றொரு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
எல்.பி. பினான்ஸ் எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்
குசல் மெண்டிஸ் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்ட ஜோன் கீல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எல்.பி. பினான்ஸ் 102 ஓட்டங்களால் வெற்றியீட்டிக் கொண்டது.
இளம் வீரர்களின் அபார ஆட்டத்தால் ஹேலீஸ், ஜோன் கீல்ஸ் அணிகளுக்கு வெற்றி
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய எல்.பி. பினான்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்றது. விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணிக்கு திமுத் கருணாரத்ன நிதானமாக ஆடியபோதும் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் ஜோன் கீல்ஸ் அணி 40.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களையே பெற்றது. திமுத் கருணாரத்ன 73 ஓட்டங்களை பெற்றார்.
சிறப்பாக பந்துவீசிய ஷெஹான் ஜயசூரிய 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
எல்.பி. பினான்ஸ் – 318/6 (49) – குசல் மெண்டிஸ் 103*, அஞ்செலோ பெரேரா 62, ஷெஹான் ஜயசூரிய 50, சஹான் ஆரச்சிகே 23, இசுரு உதான 28*, சதீர சமரவிக்ரம 21, ஜெப்ரி வன்டர்சே 2/68
ஜோன் கீல்ஸ் – 216 (40.1) – திமுத் கருணாரத்ன 73, மனெல்கர் டி சில்வா 34, பானுக்க ராஜபக்ஷ 22, மதுக்க லியனபத்திரண 21, ஷெஹான் ஜயசூரிய 4/50, ஷிரான் பெர்னாண்டோ 2/42
முடிவு – எல்.பி. பினான்ஸ் 102 ஓட்டங்களால் வெற்றி
மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா எதிர் டிமோ
கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணியை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய டிமோ அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மாஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காக மஹேல உடவத்த 82 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எந்த வீரரும் கைகொடுக்கவில்லை. இதனால் அந்த அணி 193 ஓட்டங்களுக்கே சுருண்டது. நிசல தாரக்க சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய டிமோ அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் கடைசி வரை போராடி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் சுருக்கம்
மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா – 193 (39.2) – மஹேல உடவத்த 82, தம்மிக்க பிரசாத் 27, நிசல தாரக்க 4/36, ஷம்மு அஷான் 2/24
டிமோ – 199/8 (46.5) – சரித்த குமாரசிங்க 44, நிசல தாரக்க 36, தினேஷ் சந்திமால் 34, கமிந்து மெண்டிஸ் 3/42, டீ.எம். சம்பத் 2/24
முடிவு – டிமோ அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி
டீஜே லங்கா PLC எதிர் கான்ரிச் பினான்ஸ்
சச்சித்ர சேரசிங்கவின் துடுப்பாட்டம் லசித் மாலிங்கவின் பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியோடு மழையின் இடையூறுக்கு மத்தியில் கான்ரிச் பினான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டீஜே லங்கா அணி டக்வத் லுவிஸ் முறையில் 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டீஜே லங்கா அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது. சச்சித்ர சேரசிங்க 70 ஓட்டங்களை குவித்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கான்ரிச் பினான்ஸ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை லசித் மாலிங்க வீழ்த்தினார். இந்நிலையில் அந்த அணி 27.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டி மழையால் தடைப்பட்டது. இதனால் டக்வத் லுவிஸ் முறையில் டீஜே லங்காவின் வெற்றி உறுதியானது.
போட்டியின் சுருக்கம்
டீஜே லங்கா PLC – 255/7 (50) – சச்சித்ர சேரசிங்க 70, மினோத் பானுக்க 49, சச்சித்ர சேனநாயக்க 41, மிலிந்த சிறிவர்தன 25, டிலேஷ் குணரத்ன 3/43, அகில தனஞ்சய 2/39
கான்ரிச் பினான்ஸ் – 165/7 (27.2) – ஓசத பெர்னாண்டோ 60, முதுமுதலிகே புஷ்பகுமார 20*, அலங்கார அசங்க 28, லசித் மாலிங்க 3/25
முடிவு: டீஜே லங்கா 23 ஓட்டங்களால் வெற்றி (டிக்வர்த் லுவிஸ் முறை)
சம்பத் வங்கி எதிர் கொமர்சியல் கிரெடிட்
மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சம்பத் வங்கிக்கு எதிராக கொமர்சியல் கிரெடிட் அணி நெருக்கடி இன்றி டக்வர்த் லுவிஸ் முறையில் 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. ஜீவன் மெண்டிஸ் 66 ஓட்டங்களை பெற்றதோடு சிறப்பாக பந்து வீசிய மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொமர்சியல் கிரெடிட் அணி 38 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்று வெற்றியை நெருங்கியபோது மழை குறுக்கிட்டது. இதனால் அந்த அணிக்கு டக்வத் லுவிஸ் முறையில் வெற்றி கிடைத்தது.
போட்டியின் சுருக்கம்
சம்பத் வங்கி – 222 (45) – ஜீவன் மெண்டிஸ் 66, தசுன் ஷானக்க 43, கௌஷால் சில்வா 31, மலிந்த புஷ்பகமார 4/33, சாமிக்க கருணாரத்ன 2/43
கொமர்சியல் கிரெடிட் – 206 (38) – உபுல் தரங்க 46, சதுன் வீரக்கொடி 45, லஹிரு மதுசங்க 44*, வனிந்து ஹசரங்க 40*, சரித்த புத்திக்க 3/28, ஹசந்த பெர்னாண்டோ 2/57
முடிவு – கொமர்சியல் கிரெடிட் 32 ஓட்டங்களால் வெற்றி (டக்வர்த் லுவிஸ் முறை)
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க