பெயார் அண்ட் லவ்லி (Fair & Lovely) அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Division B) கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (23) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ்
கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பாக போட்டியில் ஜோன் கில்ஸ் மற்றும் எக்ஸ்போ லங்கா இரு அணிகளும் தலா 165 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
வர்த்தக ஒரு நாள் தொடரின் அரையிறுதியில் மாஸ் சிலுவேட்டா, கொமர்ஷல் கிரடிட் அணிகள்
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் பிரிவு A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள்
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 165 ஓட்டங்களுக்கு சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் மதுர லக்மால் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய எக்ஸ்போ லங்கா அணியும் விக்கெட்டுகளை காத்துக் கொள்ளவில்லை. பந்துவீச்சில் சோபித்த லக்மால் துடுப்பாட்டத்திலும் அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றார். எனினும், அந்த அணியும் சரியாக 165 விக்கெட்டுகளுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
போட்டியின் சுருக்கம்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 165 (40) – ரொஸ்கோ தட்டில் 41, அஷான் சில்வா 31, அஷேன் பீரிஸ் 28, மதுர லக்மால் 5/58, அயன சிறிவர்தன 3/32
எக்ஸ்போலங்கா – 165 (49.3) – மதுர லக்மால் 45, விஷ்வ சதுரங்க 32, சச்சித்த ஜயதிலக்க 3/36, ரொஸ்கோ தட்டில் 2/03, அக்பர் காதர் 2/38
முடிவு –சமநிலையில் முடிவு
சிடிசன் டெவலொப்மன்ட் பிஸ்னஸ் எதிர் கொமர்சியல் கிரெடிட்
துடுப்பாட்டம் மற்றும் பந்துவிச்சில் சோபித்த சிடிசன் டெவலொப்மன்ட் பிஸ்னஸ் (CDB) அணி கொமர்சியல் கிரெடிட் அணியை எந்த நெருக்கடியும் இன்றி 42 ஓட்டங்களால் வென்றது.
ஒரே ஒரு வெற்றி அடுத்தடுத்த போட்டிகளின் முடிவை மாற்றிவிடும் – டிக்வெல்ல நம்பிக்கை
இலங்கை அணி தற்போதுள்ள நிலையில், ஒரு வெற்றியை பெற்றுக்கொள்ளுமானால், அடுத்தடுத்த
சீரற்ற காலநிலை காரணமான 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய CDB அணிக்கு சச்சின் ஜயவர்தன சிறப்பாக துப்பெடுத்தாடி 78 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 43 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கொமர்சியல் கிரெடிட் அணியை CDB அணி 161 ஓட்டங்களுக்கே சுருட்டியது.
போட்டியின் சுருக்கம்
சிடிசன் டெவலொப்மன்ட் பிஸ்னஸ் – 203/9 (43) – சச்சின் ஜயவர்தன 78, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 35, ஷிஹான் டிலசிறி 23, சுரங்க சாலிந்த 3/35, சதகன் பத்திரன 2/32, ஆதேஷ திலஞ்சன 2/33
கொமர்ஷல் கிரெடிட் – 161 (38.2) – பிரனீத் விஜேசேன 28, சுரங்க சாலிந்த 27, அதேஷ திலஞ்சன 25, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 4/41, ஷாலுக்க சில்வா 2/31, சச்சின் ஜயவர்தன 2/34
முடிவு: CDB 42 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க