ஜோன் கீல்ஸ் அணியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய கான்ரிச் பினான்ஸ்

362

பெயார் அண்ட் லவ்லி (Fair & Lovely) அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Division B) கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகள் இன்று (20) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

CDB எதிர் சிங்கர் ஸ்ரீலங்கா

கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CDB அணி தமது  சிறப்பான பந்துவீச்சு மூலம் சிங்கர் அணியை 39 ஓட்டங்களால் வீழ்த்தியது.

சீரற்ற காலநிலை காரணமாக 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் CDB அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

இம்ரான் கானின் அதிரடி பந்துவீச்சால் CDB அணி போராடி வெற்றி

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்கர் ஸ்ரீலங்காவின் விக்கெட்டுகளை ஷாலுக்க சில்வா (4) மற்றும் இம்ரான் கான் (3) ஆகியோர் வீழ்த்தினர்.

இதனால் சிங்கர் அணி 18.4 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் சுருக்கம்

CDB – 165/6 (20) – ஷிஹான் திலக்சிறி 52, சச்சின் ஜயவர்தன 44, ஹஷான் வனசேகர 46*, பசிந்து டில்ஷான் 4/25, சதுர லக்ஷான் 2/22

சிங்கர் ஸ்ரீலங்கா – 126 (18.4) –  விமுக்தி குலதுங்க 40, இம்ரான் கான் 3/26, ஷாலுக்க சில்வா 4/26, ரவிச்சந்திர குமார 2/24

முடிவு – CDB அணி 39 ஓட்டங்களால் வெற்றி


எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் எதிர் யுனிலிவர் ஸ்ரீலங்கா

குறைந்த ஓட்டங்களை பெற்ற எக்ஸ்போலங்கா அணி அதனை காப்பாற்றிக் கொண்டு யுனிலிவர் ஸ்ரீலங்க அணியுடனான போட்டியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கட்டுநாயக்க, MCG மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட  எக்ஸ்போலங்கா அணி 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் அந்த அணி கடைசி வரை போராடி யுனிலிவர் அணியை 178 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

இதன்போது எக்ஸ்போ லங்கா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இளம் வீரர் அயன சிறிவர்தன 66 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் – 184 (44.5) – அயன சிறிவர்தன 66, டிலான் ஜயலத் 34, சச்சித் லக்ஷான் 26, கிஹான் டி சொய்சா 3/22, ரசிக்க பிரசாத் 2/24  

யுனிலிவர் ஸ்ரீலங்கா – 178 (45.2) – சச்சிந்து கொலம்பகே 42, சச்சின் பெர்னாண்டோ 50, ஹஷான் ஹேவனாயக்க 2/39, சச்சித் லக்ஷான் 2/16, நெரஞ்சன வன்னியாரச்சி 2/25

முடிவு – எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி   


ஹட்டன் நெஷனல் வங்கி எதிர் கொமர்சியல் கிரெடிட்

அஷேன் பெர்னாண்டோவின் அபார சதத்தின் உதவியோடு கொமர்சியல் கிரெடிட் அணிக்கு எதிரான போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி 87 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.   

இலகு வெற்றியைப் பதிவு செய்த டீஜேய் லங்கா, மாஸ் சிலுவேட்டா அணிகள்

மக்கொன சர்ரே வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஹட்டன் நெஷனல் வங்கி சார்பில் அஷேன் பெர்னாண்டோ 108 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் அந்த அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிங்கிய கொமர்சியல் கிரெடிட் சார்பில் அகீல் இன்ஹாம் 71 ஓட்டங்களை பெற்று சோபித்தபோதும் அந்த அணி 222 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஹட்டன் நெஷனல் வங்கி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சஜீவ வீரக்கோன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நெஷனல் வங்கி –  309/7 (50) – அஷேன் பெர்னாண்டோ 108, டேஷான் டயஸ் 53, சஜீவ வீரகோன் 22*, விமுக்தி பெரேரா 31*, சுரங்க சாலிந்த 2/56, பிரனீத் விஜேசேன 2/47

கொமர்சியல் கிரெடிட் – 222 (39.2) – அகீல் இன்ஹாம் 71, அதீஷ திலஞ்சன 45, சம்மிக்க பெரேரா 37, சஜீவ வீரக்கோன் 4/48

முடிவு – ஹட்டன் நெஷனல் வங்கி 87 ஓட்டங்களால் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் கான்ரிச் பினான்ஸ்

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஜோன் கீல்ஸ் அணியை கான்ரிச் பினான்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி 104 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் அந்த அந்த அணி கான்ரிச் பினான்ஸுக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தது. எனினும் தரூஷ இத்தமல்கொடவின் (66) சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் கான்ரிச் பினான்ஸ் அணி கடைசி விக்கெட்டில் வெற்றி இலக்கை எட்டியது.  

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 104 (38) – அஷேன் சில்வா 29, பிரமோத் மதுவன்த 3/26, சானக்க தேவிந்த 2/28, பூர்ண சாருக்க 2/30

கான்ரிச் பினான்ஸ் – 105/9 (30.3)  – தருஷ இத்தமல்கொட 66, நவிந்து நிர்மால் 23, அஷேன் சில்வா 4/09, தரிந்து ரத்னாயக்க 3/40

முடிவு – கான்ரிச் பினான்ஸ் 1 விக்கெட்டால் வெற்றி   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<