ஹர்ஷ ராஜபக்ஷவின் அபார சதத்தின் மூலம் சிங்கர் ஸ்ரீலங்கா வெற்றி

273

பெயார் அண்ட் லவ்லி (Fair & Lovely) அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Division B) கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் புதன்கிழமை (17) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

யுனிலீவர் ஸ்ரீலங்கா எதிர் சிங்கர் ஸ்ரீலங்கா

கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஹர்ஷ ராஜபக்ஷவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் சிங்கர் ஸ்ரீறிலங்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

T20யை ஒத்த போட்டிக்காக 3 மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகலை…

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட யுனிலீவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 38 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. கிஹான் டி சொய்சா (63) அரைச்சதம் ஒன்றை எட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த சிங்கர் ஸ்ரீலங்கா அணியின் ஒருமுனை விக்கெட்டுகள் மளமளவென்று சரிய மறுமுனையில் இருந்த ஹர்ஷ ராஜபக்ஷ அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் 112 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் சிங்கர் ஸ்ரீறிலங்கா அணி 38 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 211 ஓட்டங்களை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

யுனிலீவர் ஸ்ரீலங்கா – 210/9 (38) – கிஹான் டி சொய்சா 63, சச்சின் பெர்னாண்டோ 46, கயான் ரூபசிங்க 22, விமுக்தி குலதுங்க 3/17, தேவிந்த் பத்மனாதன் 2/37

சிங்கர் ஸ்ரீலங்கா – 211/9 (38) – ஹர்ஷ ராஜபக்ஷ 112, ரவீன் யாசா 37, ஜேகொப் சச்சின் 25, ரசிக்க பிரசாத் 2/33

முடிவு சிங்கர் ஸ்ரீலங்கா 1 விக்கெட்டால் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் ஹட்டன் நெஷனல் வங்கி

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் தமது விக்கெட்டுகளை காத்துக்கொண்டு வெற்றியை நெருங்கி வந்த ஹட்டன் நெஷனல் வங்கி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வத் லுவிஸ் முறையில் வெற்றியீட்டியது.

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது. விமுக்தி பெரேரா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தேசிய அணி வீரர்களின் பங்களிப்போடு மாஸ் யுனிச்செலா, ஹேய்லஸ் அணிகளுக்கு வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு A வர்த்தக நிறுவனங்களுக்கு…

 இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹட்டன் நெஷனல் வங்கி 23 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. அந்த தருணத்தில் வெற்றிக்கு ஹட்டன் நெஷனல் வங்கி 137 ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டி இருந்ததால் அந்த அணி 2 ஓட்டங்களால் டக்வத் லுவிஸ் முறையில் வெற்றி பெற்றது. ஹட்டன் நெஷனல் வங்கி சார்பில் மாதவ வர்ணபுர ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 197 (30) – தரிந்து ரத்னாயக்க 32, மலிந்து மதுரங்க 30, சச்சித்த ஜயதிலக்க 57, விமுக்தி பெரேரா 3/50, கோசல குலசேகர 2/28

ஹட்டன் நெஷனல் வங்கி – 139/3 (23) – மாதவ வர்ணபுர 59*, டேஷான் டயஸ் 49, அக்தாப் காதர் 2/26

முடிவு – ஹட்டன் நெஷனல் வங்கி 2 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை) 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க