வர்த்தக சேவை கிரிக்கெட் பி பிரிவின் அனுசரணையாளராக யுனிலிவர்

237
MCA ‘B

வர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற 2017/2018 பருவகாலத்திற்கான வர்த்தக சேவை கிரிக்கெட்டின் பி பிரிவு போட்டிகளின் (MCA ‘B’ Division cricket tournament) பிரதான அனுசரணையாளர்களாக யுனிலிவர் நிறுவனம் செயற்படவுள்ளது.

குறித்த தொடர் எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பிலுள்ள வர்த்தக சங்க கிரிக்கெட் மைதானத்தில் (MCA grounds Colombo) ஆரம்பமாகவுள்ளது.

கடந்த முறை சம்பியன் பட்டத்தை வென்ற கென்ரிச் பினான்ஸ் (Kanrich Finance) நிறுவனமும், 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட LB பினான்ஸ் ( LB Finance) நிறுவனம் இம்முறை பிரிவிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் யுனிலிவர் ஸ்ரீலங்கா (Unilever SL ) மற்றும் DHT சீமெந்து நிறுவனம் ஆகியன புதிய அணிகளாக இம்முறை போட்டித் தொடரில் இணைந்துகொள்ளவுள்ளன.

இந்நிலையில் இம்முறை போட்டித் தொடரில் 7 அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், ஒவ்வொரு அணிகளும் முதல் சுற்றில் ஏனைய அணிகளுடனும் போட்டியிட வேண்டும்.

முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பெற்றக்கொள்ளும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும்.

அதன்படி அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் 2 அணிகளும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வர்த்தக சங்க கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

போட்டி அட்டவணை

2017 செப்டம்பர் 9ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
01 MCA Unilever SL Vs John Keells “B”

2017 செப்டம்பர் 13ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
02 BRC DHT Cement John Keells “B”
03 Moratuwa Stadium Mobitel “A” MAS Silueta “A”
04 Moors Singer SL “A” Unilever SL

2017 செப்டம்பர் 17ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
05 Surrey -Maggona MAS Silueta “A” Comm.Credit “B”
06 BRC Unilever SL DHT Cement
07 Army -Panagoda Mobitel “A” Singer SL “A”

2017 செப்டம்பர் 20ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
08 BRC Comm.Credit “B” Singer SL “A”
09 Army -Panagoda John Keells “B” MAS Silueta “A”
10 Surrey-Maggona Mobitel “A” DHT Cement

செப்டம்பர் 23ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
11 Surrey-Maggona MAS Silueta “A” Singer SL “A”
12 Army -Panagoda Comm.Credit “B” Mobitel “A”

செப்டம்பர் 27ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
13 FTZ-Katunayake Singer SL “A” DHT Cement
14 BRC John Keells “B” Comm.Credit “B”
15 Moratuwa Stadium Unilever SL Mobitel “A”

ஒக்டோபர் முதலாம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
16 MCA John Keells “B” Mobitel “A”
17 FTZ-Katunayake MAS Silueta “A” Unilever SL
18 P.Sara Oval DHT Cement Comm.Credit “B”

ஒக்டோபர் 4ஆம் திகதி

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
19 MCA DHT Cement MAS Silueta “A”
20 FTZ-Katunayake Comm.Credit “B” Unilever SL
21 Colts Ground Singer SL “A” John Keells “B”

ஒக்டோபர் 8ஆம் திகதி (அரையிறுதிப் போட்டி)

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
22 MCA League – No 01 League – No 04
23 FTZ Katunayake League – No 02 League – No 03

ஒக்டோபர் 9ஆம் திகதி (மேலதிக நாள்)

ஒக்டோபர் 14ஆம் திகதி (இறுதிப் போட்டி)

போட்டி இல. மைதானம் சொந்த அணி வருகை அணி
24 MCA Winner-Match no 22 Winner-Match no 23