லண்டனில் IPL நடத்தப்பட வேண்டும் என்கிறார் சாதிக் கான்

251

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, எம். எஸ். டோனி ஆகிய வீரர்கள் லண்டனில் IPL போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்க விரும்புவதாக லண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருட IPL போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடைபெற்று வருகிறது

IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக மீண்டும் VIVO நிறுவனம்

சென்னை, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், டெல்லி, பெங்களுரூ ஆகிய ஆறு நகரங்களில் IPL போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன், கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.  

இந்த நிலையில், IPL போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது,

”IPL போட்டியை லண்டனில் நடத்த ஆர்வமாக உள்ளேன். இதன்மூலம் உலகின் விளையாட்டுத் தலைநகரமாக லண்டன் விளங்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டுமல்ல.  

IPL போட்டியில் விளையாடும் விராத் கோஹ்லியையும் லண்டனில் பார்க்க விரும்புகிறேன். பெங்களூரு அணியின் தலைவராக விராத் கோஹ்லியையும், சென்னை தலைவராக டோனியையும், மும்பை தலைவராக ரோஹித் சர்மாவையும் இங்கு காண ஆர்வமாக உள்ளேன்.  

Video – இலங்கை அணியின் திட்டம் என்ன? | Cricket Galatta Epi 52

IPL நிர்வாகத்திடமும் IPL அணிகளிடமும் இதுகுறித்துப் பேசி வருகிறோம். இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் மற்றவர்களிடமும் பேசி இந்தக் கனவை நிறைவேற்ற விரும்புகிறேன்

இதனால் லண்டனுக்கு மட்டுமல்ல, இங்கிலாந்தின் ஏனைய கிரிக்கெட் மைதானங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். IPL போட்டியை லண்டனில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்தியாவுக்கு லண்டனையும், லண்டனுக்கு இந்தியாவையும் மிகவும் பிடிக்கும். இதனால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்

இந்திய பொதுத் தேர்தல் காரணமாக 2009இல் IPL போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டதுடன், இதே காரணத்துக்காக 2014இல் ஆரம்ப IPL போட்டிகள் சில ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது.  

பல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்

கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் IPL போட்டிகள் நடத்தப்பட்டது

இதுஇவ்வாறிருக்க, மிட்ல்செக்ஸ் அணியுடன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஏசியன் கிண்ணப் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 2009இல் விளையாடியிருந்தது. ராஜஸ்தான் றோயல்ஸ் மாத்திரமே லண்டனில் விளையாடிய ஒரேயொரு IPL அணியாகும்.

இதனிடையே, NFL (அமெரிக்கன் புட்போல்), MLB (ஐக்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்டம்) ஆகியவற்றை லண்டன் வழமையாக நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<