ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் சகலதுறை வீரர் கெயல் மேயர்ஸ் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் கிங் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
>>மே.தீவுகளை வைட்வொஷ் செய்து இலங்கை மகளிர் அணி சாதனை<<
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்களை பெற்றிருந்த போது களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
தற்போது பிரெண்டன் கிங் முழுமையான தொடரிலிருந்தும் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கெயல் மேயர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
கெயல் மேயர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 37 T20I போட்டிகளில் விளையாடி 727 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<