IPL போட்டியிலிருந்து விலக தீர்மானித்த கிளேன் மெக்ஸ்வெல்!

Indian Premier League 2024

217

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வல் உடல் மற்றும் உளவியல் ரீதியில் தயாராகுவதற்காக IPL போட்டியொன்றிலிருந்து விலகியுள்ளார். 

கிளேன் மெக்ஸ்வெல் பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. 

முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு சிறு அவகாசம் வழங்கும் பங்களாதேஷ் கிரிக்கெட்

எனினும் அவருடைய பிரகாசிப்பின்மை காரணமாக அணியிலிருந்து சற்று ஓய்வை பெற்றுக்கொண்டதாக கிளேன் மெக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். 

தனிப்பட்ட ரீதியில் இதுவொரு இலகுவான தீர்மானம். கடைசி போட்டியை தொடர்ந்து பயிற்றுவிப்பாளர் மற்றும் பெப் டு பிளேசிஸிடம் சென்று எனக்காக மற்றுமொரு வீரரை அணியில் இணையுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். மோசமான பிரகாசிப்புகளின் போது தொடர்ந்தும் போட்டிகளில் விளையாடினால் மேலும் பிரகாசிப்பு குறைவடையும். 

அதுமாத்திரமின்றி உடல் மற்றும் உளவியல் ரீதியில் நான் சிறப்பாக தயாராகுவதற்கு இதுவொரு நல்ல தீர்மானமாக இருக்கும். எனது உடல் நிலையை சரியாக வைத்துக்கொண்டால் தேவையான நேரத்தில் போட்டிகளில் விளையாட முடியும். என்னால் சிறந்த உடல் மற்றும் உளவியல் ரீதியில் தயாராக முடியும் என நம்புகிறேன். 

அதுமாத்திரமின்றி மற்றுமொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமானால், அவர் அணியில் இணைந்து என்னுடைய இடத்தை அவருக்கென தக்கவைத்துக்கொள்ளவும் முடியும் என்றார். 

கிளேன் மெக்ஸ்வெல் IPL தொடருக்கு வருவதற்கு முன்னர் 17 T20 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் அடங்கலாக 42 என்ற ஓட்ட சராசரியில் 552 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும் IPL தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 5 என்ற சராசரியில் 32 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<