உலகக்கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் கெயல் ஜெமிசன் இணைக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்ரி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.
சாதனை வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதியில் இந்தியா
இவர் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் பாதியில் களத்திலிருந்து வெளியேறியதுடன், துடுப்பெடுத்தாட மாத்திரம் களம் நுழைந்திருந்தார்.
தற்போது முழு தொடரிலிருந்தும் மெட் ஹென்ரி வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கெயல் ஜெமிசன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். கெயல் ஜெமிசன் அணியில் இணைக்கப்படுவதற்கான அனுமதியை ஐசிசி தொழிநுட்ப குழு வழங்கியுள்ளது.
கெயல் ஜெமிசன் நியூசிலாந்து அணிக்காக இதுவரையில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<