அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மெதிவ் வேட்டிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
T20 உலகக்கிண்ணத்தில் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுக்கும் இரண்டாவது அவுஸ்திரேலிய அணி வீரராக மெதிவ் வேட் மாறியுள்ளார்.
>> ‘கோலி ஓய்வுபெற வேண்டும்’ – அக்தர் வேண்டுகோள்
இதற்கு முன்னர் அந்த அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அடம் ஷாம்பா கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்தார். இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசிப்போட்டியில் இவர் விளையாடவில்லை.
எவ்வாறாயினும் மெதிவ் வேட் வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் விக்கெட் காப்பு பயிற்சிகளை மேற்கொண்டுவரும் காணொளிகளும் சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் வீரர்கள் போட்டிகளில் விளையாட முடியும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.
அதன் அடிப்படையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற சுபர் 12 போட்டியில் அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டொக்ரல் கொவிட்-19 தொற்றுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<