தலையில் பந்து தாக்கியதால் வெளியேறிய டேவிட் வோர்னர்

Australia tour of India 2023

252

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுவருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வோர்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி விளையாடியிருந்தார்.

IPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

எனினும் முதல் ஆட்டத்தின்போது மொஹமட் சிராஜ் வீசிய பந்து ஒன்று டேவிட் வோர்னரின் தலையில் தாக்கியிருந்தது. அதனைத்தொடர்ந்து வோர்னர் துடுப்பெடுத்தாடிய போதும் 15 ஓட்டங்களுடன் மொஹமட் சமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா, டேவிட் வோர்னர் சற்று சோர்வடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டேவிட் வோர்னருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முழுமையாக ஓய்வு வழங்கியிருப்பதுடன், அவருக்கு பதிலாக மெட்  ரென்சோவ்  இணைக்கப்பட்டுள்ளார்.

ஐசிசியின் விதிமுறைப்படி வீரர் ஒருவரின் தலையில் பந்து தாக்கினால் அவருக்கு பதிலாக அதே பாணியில் விளையாடக்கூடிய வீரர் ஒருவரை அணியில் இணைக்க முடியும். அதன்படி மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான மெட்  ரென்சோவிற்கு இந்தப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<