இறுதிவரை களத்தில் நின்று போட்டியை சமனிலை செய்த மெண்டிஸ், மெதிவ்ஸ்
வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்
குசல் மெண்டிஸ் – அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய இரண்டு வீரர்களும் நியூசிலாந்து அணியுடன் சாதனை இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கி இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியினை தழுவ இருந்த டெஸ்ட் போட்டி ஒன்றினை புதன்கிழமை (19) சமநிலை செய்திருந்தனர். குறித்த போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் (83), சதம் (120) என இரண்டு இன்னிங்ஸ்களிலும் அசத்தியதோடு, குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்சில் சதம் (141) ஒன்றினை விளாசியிருந்தார்.
இப்படியாக இரண்டு வீரர்களும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறந்த பதிவுகளை காட்டியதே ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் முன்னேற்றம் பெற பிரதான காரணமாக அமைகின்றது.
இதேவேளை, நியூசிலாந்து அணியுடனான அதே டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களை சாய்த்திருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றார். ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கும் லஹிரு குமார தற்போது 43ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.
மீண்டும் மும்பை அணியில் விளையாடவுள்ள லசித் மாலிங்க
இந்தியாவின் ஜெய்பூரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில், இலங்கை அணியின்
இதேநேரம், இலங்கை அணியுடனான அண்மைய டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் (264) கடந்த நியூசிலாந்து அணியின் மற்றுமொரு வீரரான டொம் லேத்தம் ஐ.சி.சி. இன் புதிய துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அபார முன்னேற்றம் ஒன்றினை காட்டியுள்ளார். பதினைந்து இடங்கள் முன்னேறியுள்ள லேத்தம் தற்போது 22ஆவது இடத்தில் இருக்கின்றார். இதே தருணத்தில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் செளத்தி நான்கு இடங்கள் முன்னேறி ஐ.சி.சி. இன் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 11ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வீரரான உஸ்மான் கவாஜா ஒரு இடம் முன்னேறி ஐ.சி.சி. இன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 12ஆம் இடத்திற்கு வந்திருப்பதோடு அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்னும் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஒன்பது இடங்கள் முன்னேறி 46ஆவது இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க