சகலதுறை வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் இந்திய அணியுடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் (ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில்) இலங்கை அணிக்காக பந்து வீசுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதாகும் மெதிவ்ஸ், காயங்கள் காரணமாக ஒன்றரை வருட காலமாக பந்து வீசாது இருந்த பின்னர் இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்ற இருதரப்பு தொடரின் போதே மீண்டும் பந்து வீசத் தொடங்கினார். எனினும் உபாதை ஒன்றை திரும்பவும் எதிர்கொண்ட மெதிவ்சுக்கு பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற இருதரப்பு தொடரில் பங்கேற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
தற்போது மெதிவ்ஸ் இந்திய அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஒரு முழு நேர துடுப்பாட்ட வீரராகவே பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒரு நாள் போட்டிகளுக்கு மெதிவ்ஸ் தெரிவாகுவார் எனின், மெதிவ்ஸ் அப்போட்டிகளில் பந்து வீசுவார் என்பதனை உறுதியாகக் கூறுகின்றேன். ஏனெனில் அவர் பந்து வீசுவதற்கான பயிற்சிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்“என இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்னாயக்க கடந்த வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
“அஞ்செலோவுக்கு மிகவும் பாரதூரமான ஒரு காயம் ஏற்பட்டிருந்தது. அது அவரது தொடைத் தசையோடு சேர்த்து, முழங்கால் தசையினையும் பாதித்தது. எனவே, நாம் பயிற்சிவேளைகளின் போது மெதிவ்சை அவர் எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை கவனமாக அவதானித்தோம். மெதிவ்ஸ் அப்போது மிகவும் அவதனமான முறையில் தனது நிலைமைகளை முகாமைத்துவம் செய்து செயற்பட்டிருந்தார்“என்றார்.
கோஹ்லி – விஜய் இணைப்பாட்டம் மூலம் இந்திய அணி அபார
Hyperlink –
கோஹ்லி – விஜய் இணைப்பாட்டம் மூலம் இந்திய அணி அபார
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும்…
“நேற்று, மெதிவ்ஸ் பயிற்சி வலைகளுக்குள் ஆறு ஓவர்கள் வரையில் வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஓவர்கள் இன்றைய (03) பயிற்சிவேளையில் ஏழாக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம். எனினும் (டெஸ்ட் போட்டிகளில்) அவர் கட்டாயமாக துடுப்பாட வேண்டி வரும் சந்தர்ப்பத்திலோ அல்லது வேறு விடயங்களுக்காகவோ இது மாறவும் முடியும்“ என மெதிவ்சின் பந்து வீச்சுப் பயிற்சிகள் பற்றி ரத்னாயக்க தெரிவித்தார்.
மெதிவ்சின் துணை இல்லாத காரணத்தினால், இலங்கை அணி தற்போது தமது பந்து வீச்சுத்துறையினை சமநிலைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது. அத்தோடு இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை வலிமைப்படுத்தும் நோக்கோடு ரோஷன் சில்வாவை அறிமுகப்படுத்தியிருக்கும் காரணத்தினால் நான்கு பந்து வீச்சாளர்களுக்கு இலங்கை ஓய்வை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் காயமடைந்து இலங்கையின் முன்னணி சுழல் வீரர் ரங்கன ஹேரத்தும் நாடு திரும்பி இருக்கின்றார். ஹேரத் இல்லாத காரணத்தினால் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் இலகுவாக இலங்கை பந்து வீச்சினை சமாளித்து ஓட்டங்கள் குவித்துள்ளனர்.
போட்டியின் முதல் நாள் முடிவில் 371 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து காணப்பட்ட இந்திய அணி ஒரு ஓவருக்கு நான்கை விட கூடுதலான ஓட்டங்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
“இது நாங்கள் எடுக்க வேண்டிய ஒரு முடிவாக எங்களுக்கு போய்விட்டது. நாங்கள் மேலதிக பந்து வீச்சாளர் ஒருவரையோ அல்லது ஒரு துடுப்பாட்ட வீரர் ஒருவரையோ அணியில் உள்வாங்க வேண்டியிருந்தோம். எனவே, எமது அணி துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படாததால், துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணிக்குள் உள்வாங்கி நல்ல ஓட்டங்கள் குவிக்கும் நோக்கோடு ஒரு முடிவை எடுத்திருக்கின்றோம்“ என மேலதிகமாக தாம் ஒரு துடுப்பாட்ட வீரரை இணைத்த காரணத்தினை ரத்னாயக்க விளக்கினார்.
“நாங்கள் இப்போட்டியில் முதலில் துடுப்பாட வாய்ப்பு கிடைத்திருந்தால், ஏழு துடுப்பாட்ட வீரர்களை அணிக்குள் உள்வாங்கியிருப்போம். இதனால், கடந்த போட்டிகளில கூடிய ஓவர்கள் வீசிய ஆரம்ப பந்து வீச்சாளர்களுக்கு சுமை அதிகிரித்திருக்கும். எனினும் இப்போதும் அதே நிலையே தொடர்கின்றது அவர்களே சுமையை அதிகம் உள்வாங்குகின்றனர்“ எனக் கூறிய ரத்னாயக்க இந்திய அணி இலகுவாக இலங்கைப் பந்து வீச்சாளர்களை சமாளிக்கின்றது