IPL தொடரில் நேற்று (16) நடைபெற்ற குஜராத் டைட்டண்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக அறிமுகமாகியிருந்த இலங்கை வீரர் மதீஷ பதிரண அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக இதுவரை அறிமுகமாகவில்லை என்றாலும், லசிம் மாலிங்க பாணியில் உள்ளூர் போட்டிகளில் பந்துவீசி அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
>> ஹெம்ஷையர் அணியை பந்துவீச்சில் மிரட்டிய லக்ஷான், உதித்
அந்தவகையில் நேற்றைய போட்டியில் IPL அறிமுகத்தை பெற்றுக்கொண்டதுடன், தன்னுடைய முதல் பந்துதிலேயே விக்கெட்டினை வீழ்த்தி நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டார்.
தன்னுடைய முதல் பந்தில் குஜராத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில்லின் விக்கெட்டை கைப்பற்றிய மதீஷ பதிரண, இறுதி ஓவர்களில் பந்துவீச அழைக்கப்பட்டு குஜராத் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டினை கைப்பற்றினார்.
மதீஷ பதிரண இந்தப்போட்டியில் மொத்தமாக 3.1 ஓவர்கள் வீசியதுடன், 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்தப்போட்டியை பொருத்தவரை முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணி 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், குஜராத் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது. இம்முறை IPL தொடரை பொருத்தவரை குஜராத் அணி ஏற்கனவே IPL பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், சென்னை சுபர் கிங்ஸ் அணி பிளே-ஓஃப் வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<