சுற்றுலா ஆப்கானிஸ்தான் A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை A கிரிக்கட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் A அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை வருகை தரவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த 5 போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு
- இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க!
- ஷன்டோவின் சதத்தோடு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வெற்றி
அதனைத் தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மே மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி அட்டவணை
- முதலாவது ஒருநாள் போட்டி – ஏப்ரல் 28 – ஹம்பாந்தோட்டை
- 2ஆவது ஒருநாள் போட்டி – ஏப்ரல் 30 – ஹம்பாந்தோட்டை
- 3ஆவது ஒருநாள் போட்டி – மே 03 – ஹம்பாந்தோட்டை
- 4ஆவது ஒருநாள் போட்டி – மே 05 – ஹம்பாந்தோட்டை
- 5ஆவது ஒருநாள் போட்டி – மே 07 – ஹம்பாந்தோட்டை
ஒற்றை நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி – மே 11 முதல் 14 வரை – கொழும்பு பி. சாரா ஓவல்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<