இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆடவருக்கான ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவின் 10 வெவ்வேறு மைதானங்களில் 46 நாட்கள் நடைபெறவுள்ளதுடன் நவம்பர் 19ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
மே. தீவுகளுக்கு எதிராக நெதர்லாந்து அணி வரலாற்று வெற்றி
இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 2019ஆம் ஆண்டு சம்பியனான இங்கிலாந்து மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் ஒக்டோபர் 5ஆம் திகதி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.
அதேநேரம் போட்டித்தொடரை நடத்தும் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் 5 முறை கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியை ஒக்டோபர் 8ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த இந்த போட்டிகளை தவிர்த்து மிக எதிர்பார்ப்புமிக்க இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 15ஆம் திகதி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ணத்துக்கு 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான அணிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிலிருந்து தெரிவுசெய்யப்படும்.
கடந்தமுறை போட்டித்தொடரானது இரண்டு குழுக்களாக அணிகள் வகுக்கப்பட்டு நடைபெற்ற நிலையில், இம்முறை தொடரில் ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளை தலா ஒவ்வொரு முறை எதிர்கொள்ளவுள்ளன. ஒவ்வொரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளதுடன், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு அடுத்த நாட்கள் போட்டிகளுக்கான மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறவுள்ள மைதானங்கள்
ஹைதராபாத், அஹமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோவ், பூனே, பெங்களூர், மும்பை, கொல்கத்தா
போட்டி அட்டவணை
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<