இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

Zimbabwe tour of Sri Lanka 2022

375

சுற்றுலா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மூன்று போட்டிகளுக்குமான போட்டி மத்தியஸ்தராக, ஐசிசியின் பிரதம போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவராக உள்ள ரன்ஜன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிறிஸ் மொர்ரிஸ் ஓய்வு

இதேநேரம் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான நடுவர் குழாத்தில் ஐவர் இடம்பெற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச நடுவர்கள் போட்டிகளில் இடம்பெறமுடியாத காரணத்தினால், இலங்கையில் உள்ள 5 முன்னணி நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் ஐசிசியின் உயரடுக்கு நடுவர் குழாத்தில் இடம்பெற்றுள்ள குமார் தர்மசேனவுடன், மேலும் 4 ஐசிசி நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ருச்சிர பல்லியகுருகே, லிண்டன் எனிபல், ரவீந்திர விமலசிறி மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகிய நடுவர்கள் இந்த போட்டித்தொடர் முழுவதும் நடுவராக கடமையாற்றவுள்ளனர்.

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகின்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 18 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி மத்தியஸ்தர் – ரன்ஜன் மடுகல்ல

  • நடுவர்கள் – குமார் தர்மசேன, பிரகீத் ரம்புக்வெல்ல, ரவீந்திர விமலசிறி, லிண்டன் எனிபல், ருச்சிர பல்லியகுருகே

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<