இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயார் செய்யும் நோக்கில் ஒழுங்கு செய்துள்ள அழைப்பு T20 தொடரில் போட்டி அதிகாரிகளாக செயற்படுவர்களின் விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அதன்படி, நான்கு அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்காக போட்டி மத்தியஸ்தர்களாக 03 பேரும், போட்டி நடுவர்களாக 06 பேரும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
IPL ஆடுவது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க
அதன்படி, இந்த T20 தொடருக்கு மத்தியஸ்தர்களாக T.H.R. பிரியன்த, நல்லையா தேவராஜன் மற்றும் ரவி புன்ச்சிஹேவ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம், தொடரின் போட்டி நடுவர்களுக்கான பதவிகளை கீர்த்தி பண்டார, தீபால் குணவர்தன, அசங்க ஜயசூரிய, ஹேமன்த போதெஜூ, ரோஹித ஹொட்டகச்சி மற்றும் ரவிந்திர ஹொட்டகச்சி ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.
மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த T20 தொடர் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<