ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

ICC Men's T20 World Cup 2021

889

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான முதல் மற்றும் சுப்பர் 12  சுற்றுகளுக்கான போட்டி அதிகாரிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி பெயரிட்டுள்ள இந்த போட்டி அதிகாரிகளின் பட்டியலில், 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர். 45 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான, நடுவர் குழாத்தில், அலிம் தார், மரைஸ் எரஸ்மஸ் மற்றும் ரொட் டக்கர் ஆகியோர் தங்களுடைய ஆறாவது T20 உலகக்கிண்ணத்தில் பணியாற்றவுள்ளனர்.

பாகிஸ்தான் A தொடருக்கான இலங்கை குழாத்தில் மொஹமட் சிராஸ்!

ஐசிசி T20 உலகக்கிண்ணமானது, ஓமானின் மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், ஷார்ஜா மற்றும் அபு தாபி மைதானங்களில் எதிர்வரும் 17ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இதில், 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் நடுவராக செயற்பட்ட, இலங்கையின் குமார் தர்மசேன, ஓமான் மற்றும் பபுவா நியூவ் கினியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் நடுவராக செயற்படவுள்ளார். இவருடன் நியூசிலாந்தின் கிரிஸ் கெப்பனி கள நடுவராக செயற்படவுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், ரிச்சட் கெட்ல்பிரோக் மூன்றாவது நடுவராகவும், அஷான் ரஷா நான்காவது நடுவராகவும் செயற்படவுள்ளனர்.

சுப்பர் 12 சுற்றுக்கான முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளதுடன், போட்டியின் கள நடுவர்களாக மரைஸ் எரஸ்மஸ் மற்றும் அலிம் தார் ஆகியோர் செயற்படவுள்ளதுடன், மூன்றாவது நடுவராக கிரிஸ் பிரவ்ன், போட்டி மத்தியஸ்தராக டேவிட் பூன் ஆகியோரும் செயற்படவுள்ளனர்.

போட்டி அதிகாரிகள் முதல் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டி மத்தியஸ்தர்கள் – டேவிட் பூன், ஜெப் கிரவ்ன், ரஞ்சன் மடுகல்ல, ஜவகல் ஸ்ரீநாத்

நடுவர்கள் – கிரிஸ் பிரவ்ன், அலீம் தார், குமார் தர்மசேன, மரைஸ் எரஸ்மஸ், கிரிஸ் கெப்பனி, மைக்கல் கோக், அட்ரைன் ஹோல்ட்ஸ்டொக், ரிச்சர்ட் இல்லிங்வத், ரிச்சர்ட் கெட்ல்பிரொக், நிதின் மேனன், அஷான் ரஷா,போல் ரீபெல், லங்டன் ரஸர், ரொட் டக்கர், ஜோல் வில்ஸன், போல் வில்ஸன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…