T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையர் இருவர் முக்கிய கடமையில்

ICC T20 World Cup 2022

400

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறுகிறது. மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களாக பணியாற்றவுள்ளவர்களின் பெயர் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) வெள்ளிக்கிழமை (11) அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் கள நடுவர்களில் ஒருவராக பணியாற்றவுள்ளதோடு, மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல இம்முறை T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போட்டி மத்தியஸ்தராக கடமை புரியவுள்ளார்.

இதேநேரம், T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இரண்டாவது கள நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மரைஸ் எரஸ்மஸ் பணியாற்றவுள்ளார்.

அதேவேளை, உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் மூன்றாவது நடுவராக நியூசிலாந்தின் கிறிஸ் கெபனி (Chris Gaffaney) செயற்படவுள்ளதோடு, நான்காம் நடுவருக்கான பொறுப்பு அவுஸ்திரேலியாவின் போல் ரைபலுக்கு (Paul Reiffel) கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<