இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர் MAS Holdings இன் துணை நிறுவனங்களில் ஒன்றான Bodyline இலங்கையின் தடகள வீர, வீராங்கனைகளுக்கான Kits இணை உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (07) வழங்கியிருக்கின்றது.
>>ஆசிய மரதன் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் சண்முகேஸ்வரன்<<
அதேநேரம் இலங்கை தடகள சம்மேளனத்துடன் (SLA) மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய Bodyline நிறுவனம் 2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரை இலங்கையின் தடகள விளையாட்டு சம்மேளனத்துடன் இணைந்து, நாட்டின் தடகள விளையாட்டுக்கு உத்தியோகபூர்வ ஆடைப்பங்காளர்களாக செயற்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடகள வீர, வீராங்கனைகளுக்கான Kits வழங்கும் நிகழ்வில் Bodyline நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஹன் ராஜபக்ஷ, இலங்கை தடகள விளையாட்டு சம்மேளன தலைவர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bodyline நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள Kits இலங்கையின் பராம்பரிய மேலைத்தேய நடன அழகினை பிரதிபலிக்கும் வகையிலும், இலங்கை விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பலத்தையும் ஒருங்கிணைந்த வடிவமைப்பாக காணப்படுகின்றதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை புதிதாக வழங்கப்பட்டுள்ள Kits அணிந்து இலங்கையின் தடகள விளையாட்டு வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டித் தொடர்களில் இந்த ஆண்டு பங்கெடுப்பார்கள் என நம்பப்படுகின்றது. இதில் ஆறாவது கனிஷ்ட ஆசிய தடகள சம்பியன்ஷிப், தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் மற்றும் உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் மற்றும் உலக தடகள சம்பியன்ஷிப் தொடர் ஆகியவை முக்கியமானவையாக காணப்படுகின்றன.
விளையாட்டுத்துறைக்கு வலுவூட்டும் இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளரான MAS, உள்நாட்டு விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு சர்வதேச அளவில் போட்டியிட உயர்தர விளையாட்டு ஆடைகளை வழங்குவதோடு, தொடர் புத்தாக்க விடயங்களை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<