கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் இடையிலான உலகக் கிண்ண லீக் மோதலின்போது இடுப்புத் தசை உபாதைக்கு ஆளாகிய அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸின் இடத்தினை நிரப்பும் நோக்குடன் மிச்செல் மார்ஷ் இங்கிலாந்து பயணமாகியுள்ளார்.
தவானின் சதத்தோடு அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது ……
ஐ.சி.சி. இன் விதிமுறைகளுக்கு அமைய உலகக் கிண்ணத் தொடரில் வீரர் ஒருவர் 15 பேர் கொண்ட குறிப்பிட்ட அணிக் குழாம் ஒன்றில் இருந்து உபாதை காரணமாக முழுமையாக வெளியேறினால் அவருக்கு உபாதை குணமாகிய பின்னர் அணியில் மீண்டும் இணைய முடியாமல் இருக்கும்.
அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி மார்கஸ் ஸ்டோய்னிஸின் உபாதை தொடர்பாக பூரண முடிவு ஒன்றை எடுத்த பின்னரே மிச்செல் மார்ஷினை தமது குழாத்திற்குள் முழுமையாக இணைக்கும் என கூறப்படுகின்றது. எனவே, இங்கிலாந்து வரும் மிச்செல் மார்ஷ், ஸ்டோய்னிஸ் தொடர்பாக உறுதியான முடிவு ஒன்று எடுக்கப்படும் வரையில் அவுஸ்திரேலிய அணியின் மேலதிக வீரராக இருக்கவுள்ளார்.
மிச்செல் மார்ஷ், கடைசியாக 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலேயே அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டி ஒன்றில் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, அவர் இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய A அணியில் இடம்பெறவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்தின் துரதிஷ்ட பதிவுக்குள்ளான இலங்கை அணி
பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் ……….
இதேவேளை, மார்கஸ் ஸ்டோனிஸ் பாகிஸ்தான் அணியுடன் இன்று (12) டோன்டன் நகரில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்றைய உலகக் கிண்ண மோதலில் இல்லாமல் போவது அவுஸ்திரேலிய அணிக்கு பாரிய இழப்பாகும்.
ஸ்டோய்னிஸ் உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, மஹேந்திர சிங் டோனி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி திறமையினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு டில்ஷான் கூறும் அறிவுரை
மார்கஸ் ஸ்டோய்னிஸ் இல்லாத நிலையில், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவருடனோ அல்லது மேலதிக பந்துவீச்சாளர் ஒருவருடனோ களமிறங்கும் என குறிப்பிட்டுள்ளது.
எனினும், அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஆரோன் பின்ச் மைதான நிலைமைகளை கருத்திற் கொண்ட பின்னரே அந்த வீரர் யார்? என்பது தீர்மானிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலிய அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<