IPL தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்?

328
Marsh
Image Courtesy : IPL

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் கணுக்கால் காயம் காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக, அந்த அணி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயில் நேற்றுமுன்தினம் (21) நடைபெற்ற .பி.எல் கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

>> அஷ்வின் IPL தொடரில் நீடிப்பது சந்தேகம்

இந்தப் போட்டியின் 5ஆவது ஓவரை மிட்செல் மார்ஷ் வீசினார். அந்த ஓவரின் 2ஆவது பந்தை எதிர்கொண்ட ஆரோன் ஃபிஞ்ச்Drive Shotஅடிக்க, அதை மிட்செல் மார்ஷ் காலால் தடுக்க முயன்றார்.  

அப்போது எதிர்பாராதவிதமாக மிட்செல் மார்ஷின் கணுக்கால் திருகியது. எனினும், மேலும் 2 பந்துகளை வீசிய அவர், அந்த ஓவரில் 4 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். 

இந்த நிலையில், சன்ரைஸர்ஸ் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது, 10ஆவது வீரராக மார்ஷ் களமிறங்கினார். அப்போது அவர் களத்தில் நிற்பதற்கு சிரமப்பட்டார்

இதுஇவ்வாறிருக்க, அவரது கணுக்கால் காயம் பெரிய பிரச்சினையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இம்முறை .பி.எல் தொடர் முழுவதும் அவர் விளையாட வாய்ப்பில்லை என ஹைதராபாத் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பாக ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

>> Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36

மத்திய வரிசை துடுப்பாட்டம், மித வேகப் பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்கக்கூடியவரான மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து விலகும் பட்சத்தில் அது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது.  

இதனிடையே, மிட்செல் மார்ஷுக்கு பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.  

கேன் வில்லியம்சன் அல்லது மொஹமட் நபி ஆகியோர் அவருக்குப் பதிலாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், கேன் வில்லியம்சனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அணியின் தலைவர் டேவிட் வோர்னர் கூறியுள்ளார்

>> RCB அணியின் முதல் வெற்றிக்கு காரணம் யார்?

இதேவேளை, மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக 37 வயதான அவுஸ்திரேலிய சகலதுறை வீரரான டேன் கிறிஸ்டியனை கொண்டு வர சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் முயற்சித்து வருகிறது

ஏற்கனவே 40 .பி.எல் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் அவருக்கு இருப்பதால், சன்ரைசர்ஸ் அணிக்கு அது கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<