கண்டி கழகத்தின் எழுவர் ரக்பி பயிற்றுனராக பாஸில் மரிஜா நியமனம்

220

இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவரும், அண்மையில் ரக்பி அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரருமான பாஸில் மரிஜா, கண்டி விளையாட்டுக் கழகத்தின் எழுவர் ரக்பி அணியின் பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் பிரதான கழகங்களுக்கிடையிலான அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி வல்லவர் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டே பாஸில் மரிஜாவை கண்டி அணியின் பயிற்றுனராக நியமிக்க அவ்வணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தோனேசிய நட்புறவு செவன்ஸ் : இலங்கை லயன்ஸ், இராணுவப்படை சம்பியன்

இலங்கை – இந்தோனேசிய நட்புறவு ரக்பி செவன்ஸ் போட்டியில் இலங்கை…..

இதுகுறித்து பாஸில் மரிஜா தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் கருத்து வெளியிடுகையில், நான் 15 வருடங்களாக விளையாடிய கண்டி விளையாட்டுக் கழகம் என்னை கண்டி எழுவர் ரக்பி அணிக்கு பயிற்றுனராக நியமித்துள்ளமையை மிகவும் உற்சாகத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் தனது ஆரம்ப பாடசாலைக் கல்வியை மேற்கொண்ட மரிஜா, பாடசாலை காலத்தில் ரக்பி விளையாட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்திய முக்கிய வீரராக திகழ்ந்தார்.  

இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக இலங்கை தேசிய ரக்பி அணிக்கும், கண்டி விளையாட்டுக் கழகத்துக்காகவும் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த மரிஜா, தனது 33ஆவது வயதில் ரக்பி விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

இந்தோனேசிய நட்புறவு செவன்ஸ் : இலங்கை லயன்ஸ், இராணுவப்படை சம்பியன்

இலங்கை – இந்தோனேசிய நட்புறவு ரக்பி செவன்ஸ் போட்டியில் இலங்கை…………